IND vs ENG 2nd Test Playing XI Prediction: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் (IND vs ENG Test Series) இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்கும் போது இந்தியாவுக்கே அதிக சாதகம் இருப்பதாக கணிக்கப்பட்டது. சொந்த மண் ஒரு சாதகம் என்றாலும் தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை டிரா செய்து வந்த நிலையில், அதே ரிதமில் இந்த தொடரையும் எளிதாக இந்தியா கையாளும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்த பிரச்னைதான்!
ஆனால் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் மொத்தமும் தலைகீழானது. முதல் இன்னிங்ஸில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும், இங்கிலாந்து அணி (Team England) கொடுத்த முரட்டு கம்பேக் யாரும் எதிர்பார்க்காதது. தற்போது 0-1 என்ற கணக்கில் இந்திய அணி (Team India) பின்தங்கியுள்ளது. அடுத்த போட்டி விசாகப்பட்டினம் நகரில் பிப். 2ஆம் தேதி தொடங்குகிறது. இதன்பின், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய நகரங்களில் மீதம் உள்ள போட்டிகள் நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு இந்த தொடரில் எழுந்த முதல் பிரச்னை என்றால் அது முகமது ஷமி (Mohammed Shami) காயத்தில் இருந்து மீளாதது எனலாம். அவரை போன்ற வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது பெரும் பின்னடைவு. இதற்கடுத்து, ஸ்குவாட் அறிவிக்கப்பட்ட போது ஏற்பட்ட பிரச்னை என்றால் அது விராட் கோலி (Virat Kohli) முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. விராட் கோலி இல்லாத மிடில் ஆர்டர், தூணே இல்லாமல் இருக்கும் ஒரு தொங்கு பாலமாகவே காட்சியளிக்கிறது.
மேலும் படிக்க | IND vs ENG: கேஎல் ராகுல், ஜடேஜா அதிரடி விலகல்... இந்திய அணியில் இந்த 3 வீரர்கள்!
தொடரும் சோகங்கள்...
முதல் போட்டி தோல்வியில் இருந்து இந்தியா மீள முயற்சிக்கும் வேளையில், முக்கிய வீரர்களான கேஎல் ராகுல் (KL Rahul), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) ஆகியோர் காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டும் விலகியுள்ளார். இதில் கேஎல் ராகுல் மூன்றாவது போட்டிக்கு திரும்புவார் என கூறப்படும் நிலையில், ஜடேஜா இந்த தொடரில் இருந்தே மொத்தமாக விலகும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. விராட் கோலிக்கு பதில் ரஜத் பட்டிதார் (Rajat Patidar) அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவர்களின் விலகலால் சர்ஃபராஸ் கான், சௌரப் குமார் (Sourabh Kumar), வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், இவர்கள் இங்கிலாந்து தொடருக்கு தயாராவது சற்று கடினம்தான். ராகுல், ஜடேஜா காயத்திற்கு முன்னரே இந்திய அணி அடுத்த போட்டியில் நிச்சயம் பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை செய்யும் என்பதை அனைவரும் எதிர்பார்த்தனர். குறிப்பாக, ஏறத்தாழ ஹைதராபாத் மைதானத்தை போன்றதே விசாகப்பட்டினம் மைதானமும். பேட்டிங்கிற்கும் நல்ல ஒத்துழைப்பு அளிக்கும். இதனால், இந்தியா என்ன காம்பினேஷனில் விளையாடப்போகிறது என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது.
பேட்டிங் பிரச்னை
விராட் கோலி எப்போதும் இறங்கும் நம்பர் 4 ஸ்பாட்தான் தற்போதைய பிரச்னை. கேஎல் ராகுல் கடந்த போட்டியில் அந்த இடத்தில் முதல் இன்னிங்ஸில் 86 ரன்களையும் சேர்த்து ஆறுதல் அளித்தார். தற்போது அவரும் இல்லை. எனவே, ரஜத் பட்டிதார் அல்லது சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) ஆகியோரில் ஒருவரை எடுக்க முயற்சிப்பார்கள்.
மேலும் படிக்க | Jasprit Bumrah: விதியை மீறிய ஜஸ்பிரித் பும்ரா... அடுத்த போட்டியில் விளையாடுவாரா?
இருவரும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிருந்தனர். ஷ்ரேயாஸ், சுப்மான் கில் இருவரும் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும், இந்திய அணி அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்கலாம். இதன்பின்னரே அவர்கள் அடுத்தடுத்த போட்டிகளுக்கு தேவையா என்பதை முடிவு செய்துகொள்ளலாம். ஜடேஜாவுக்கு பேட்டிங்கில் மாற்றை கண்டுபிடிப்பது மிக மிக கடினம்.
பந்துவீச்சு பிரச்னை
பந்துவீச்சில் கடந்த போட்டியிலேயே சிராஜ் (Mohammed Siraj) 11 ஓவர்களை மட்டுமே ஒட்டுமொத்தமாக வீசியிருந்தார். அவர் விக்கெட்டும் பெரிதாக எடுக்காத நிலையில், அடுத்த போட்டியில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளருக்காக குல்தீப் யாதவ் அணிக்குள் கொண்டுவரப்படலாம். சிராஜ் வெளியே இருப்பது கூடுதல் ஆப்ஷனை வழங்கும். இந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் (Ravichandran Ashwin) இருந்தாலும், இவரின் பேட்டிங்கையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். வாஷிங்டன் சுந்திருக்கு (Washington Sundar) பதில் முழு நேர பேட்டரை எடுத்தால் நான்கு பந்துவீச்சாளர்களுடன் (1 வேகப்பந்துவீச்சாளர்) இந்தியா விளையாட வேண்டி வரும். எனவே, பலவீனமாக காணப்படும் பேட்டிங்கை முழுநேர பேட்டர்களை கொண்டு வலுப்படுத்துமா அல்லது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் ஆகியோரின் கையிலேயே உள்ளது.
IND vs 2nd Test: பிளேயிங் லெவன் கணிப்பு
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், சர்ஃபராஸ் கான், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவிசந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்).
மேலும் படிக்க | IPL: தோனியும் நானும் நிறைய பப்ஜி விளையாடினோம் - சிஎஸ்கே வீரர் பகிர்ந்த அனுபவம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ