சுக்கிரன் குரு சேர்க்கை 2023, ராசிகளில் அதன் தாக்கம்: பிப்ரவரி 15 அன்று இரவு 8:14 மணிக்கு, சுக்கிரன் தனது உற்ற நண்பரின் ராசியிலிருந்து விலகி குருவின் ராசியாகிய மீன ராசியில் பிரவேசித்துளார். இத்தலத்திற்கு வருவதால் சுக்கிரன் உச்சம் பெறுகிறார். சுக்கிரன் மார்ச் 11 வரை இங்கே அமர்ந்திருப்பார். மேலும் அவர் குரு பகவானுடன் இணைந்து நல்ல பலன்களைத் தருவார். இரண்டு கிரகங்களும் இணைந்ததால் மீனத்தில் 'சஞ்சீவனி யோகம்' உண்டாகும். 5 ராசிக்காரர்களுக்கு இதன் பலன் கிடைக்கும்.
ஜோதிட ஆச்சாரியர், பண்டிதர் சசிசேகர் திரிபாதி, ‘சுக்கிரன் உச்சம் பெற்று தேவகுருவின் வீட்டை அடைந்தார். சுக்கிரன், அதாவது சுக்ராச்சாரியாருக்கு சஞ்சீவனி சக்தி உள்ளது. மறுபுறம், குருவிடம் மருந்தால் ஒருவருக்கு நன்மை செய்யும் திறன் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இரண்டு கிரகங்களின் சேர்க்கை சஞ்சீவனி யோகத்தை உருவாக்குகிறது.’ என்று கூறுகிறார். இப்படிப்பட்ட கிரக சேர்க்கையால், இவ்விரு கிரகங்களும் ஆட்சி செய்யும் ராசிக்காரர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு சஞ்சீவனி சக்தி கிடைக்கும்.
சிம்மம், மீனம், ரிஷபம், தனுசு, துலாம் ஆகிய ராசிகள் மீது சஞ்சீவனி யோகத்தின் தாக்கம் இருக்கும். இவர்கள் மீனத்தில் சுக்கிரன் தங்கியிருக்கும் போது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். இந்த யோகத்தின் பலன் எவ்வளவு பெரியதென்றால், இந்த காலத்தில் இவர்களை பார்த்தாலே பல வகையான நோய்கள் குணமாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள், இறக்கும் நிலையில் உள்ளவர்கள் அல்லது நீண்ட காலமாக நோயால் அவதிப்படுபவர்களுக்கு உதவ வேண்டும். இவர்கள் சாலையில் காயம்பட்டவர்களை கண்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்களின் உதவியுடன், காயமடைந்தவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். மறுபுறம், குடும்பத்தில் யாரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்களுக்கு தங்கள் கைகளால் மருந்து கொடுக்கலாம். அப்படி செய்வதன் மூலம் நோய்கள் விரைவில் குணமாகும்.
சிம்மம்:
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு நோய்களை குணப்படுத்த முடியாத முதியவர்களை, இந்த வேளையில் சிம்ம ராசிக்காரர்களின் உணர்ச்சிகரமான, இதமான பேச்சு குணமாக்கும். சஞ்சீவனி யோகத்தின் பலனால் இவர்களின் ஸ்பரிசம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் புகுந்த வீட்டிலோ அல்லது பிறந்த வீட்டிலோ யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், உடனடியாகச் சென்று அவர்களை பார்க்கவும். அவரது வீட்டிற்குச் செல்லும் முன், நோய்க்கு ஏற்ப பழங்களை எடுத்துச்செல்லுங்கள். இதன் மூலம் அவர்கள் பலன்களைப் பெறத் தொடங்குவார்கள். அவர்களது நோய் குணமாகும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களின் தாய், தாய் மாமன், அத்தை ஆகியோரின் உடல்நிலை மோசமாக இருந்தால், அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். இந்த ராசிக்காரர்கள் தாயாருக்கு தங்கள் கைகளால் மருந்து அளிக்க வேண்டும். இதனால் அதிசயமான பலன்கள் உண்டாகும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறையுடன் வாழ்க்கை துணையை கவனித்துக் கொள்ள வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி மருந்து உட்கொள்ள வேண்டும். இவர்கள் கைகளால் கொடுக்கும் மருந்துகளுக்கும், காட்டும் அக்கறைக்கும் இந்த கால கட்டத்தில் அதிக பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி; இந்த 3 ராசிகளுக்கு 2025 வரை பிரச்சனையோ பிரச்சனை தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ