Viral Video: பாம்பை கபளீகரம் செய்ய துடிக்கும் ராஜநாகம்; இணையத்தை அதிர வைத்த வீடியோ!

வீடியோவின் தொடக்கத்தில், ராஜ நாகப்பாம்பு ஒன்று நாகப்பாம்பை விழுங்க முயற்சிப்பதைக் காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 8, 2022, 04:00 PM IST
  • ராஜ நாகப்பாம்பு ஒன்று ஒரு பாம்பை கடித்து உணவாக்க முயலும் வீடியோ.
  • பாம்பு எலி போன்ற சிறிய விலங்குகளை உணவாக ஆக்கிக் கொள்வதைப் பார்த்திருப்போம்.
  • சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ.
Viral Video: பாம்பை கபளீகரம் செய்ய துடிக்கும் ராஜநாகம்; இணையத்தை அதிர வைத்த வீடியோ! title=

இணையதளத்தில் பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்களே வைரலாகின்றன. விலங்குகள் வீடியோக்கள், விலங்குகள் சண்டையிடும் வீடியோக்கள் மிகவும் விரும்பி பார்க்கப்படும் வீடியோக்களாக உள்ளன. பாம்புகளின் பெயரை கேட்டால் படையே நடுங்கும் என்றாலும் பாம்புகள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் எளிதில் வைரலாகின்றன அத்தகைய வீடியோக்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர் எனலாம். தற்போது ராஜ நாகப்பாம்பு ஒன்று ஒரு பாம்பை கடித்து உணவாக்க முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவின் தொடக்கத்தில், ராஜ நாகப்பாம்பு ஒன்று நாகப்பாம்பை விழுங்க முயற்சிப்பதைக் காணலாம். பாம்பு ராஜ நாகப்பாம்பின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றாலும் அவ்வளவு சீக்கிரம் தப்ப முடியவில்லை என்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. 

வைரலாகும் பாம்பு வீடியோவை கீழே காணலாம்: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SNAKE WORLD (@snake._.world)

 

மேலும் படிக்க | Viral Video: ராஜநாகத்துடன் ஒரு உல்லாச நடனம் ஆடும் அதிசய இளைஞர்!

இந்த வீடியோ snake._.world என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. செப்டம்பர் 24ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோவை ஏற்கனவே பலர் பார்த்துள்ளனர். பலர் கருத்தும் எழுதியுள்ளனர். பாம்பு எலி போன்ற சிறிய விலங்குகளை உணவாக ஆக்கிக் கொள்வதைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு நாகப்பாம்பு, பாம்பை உண்ணத் துடிக்கும் வீடியோ பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

மேலும் படிக்க | கேமராவில் சிக்கிய அற்புத காட்சி; நாகமணியை பாதுகாக்கும் ராஜநாகம்!

மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News