பெரும்பாலும் பாண்டா கரடி குட்டிகள் குழ்நதைகளை போல அழகாக குறும்புகளை செய்து பலரது கவனத்தையும் வெகு விரைவாக ஈர்த்துவிடும். பிறக்கும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் பாண்டா கரடி குட்டிகள் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பின்னர் தான் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்ததாக மாறுகிறது. அதுமட்டுமல்லாது இவற்றிற்கு பிறந்த 40 நாட்கள் கழித்து தான் கண் பார்வை தெரிய ஆரம்பிக்கிறது. ஏற்கனவே பாண்டா கரடி குட்டிக்கு உயிரியல் பூங்கா பாதுகாவலர் ஒருவர் குழ்நதைகளுக்கு பால் கொடுப்பது புட்டி பால் கொடுத்த காட்சி வைரலாகி வந்த நிலையில், தற்போது ஒரு பாண்டா குட்டி பூங்கா பாதுகாவலரிடம் குறும்பாக சண்டை செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவில், அழகிய பாண்டா கரடி குட்டி ஒன்றும் அதனருகில் பச்சை நிற உடையணிந்து கொண்டு பூங்கா பாதுகாவலரும் இருப்பதை காணலாம். அந்த பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கும் பாண்டா குட்டியை, பாதுகாவலர் வம்பு இழுக்கிறார். அப்போது அந்த பாண்டா கரடி குட்டி அவருக்கு நச்சு நச்சென்று பன்ச் விடுகிறது, இருப்பினும் அவர் மீண்டும் மீண்டும் பாண்டாவை தூக்கி கொண்டும், பிடித்து இழுத்தும் வம்பு செய்கிறார். பின்னர் அந்த கரடி குட்டி ஒரு கூடையினுள் செல்கிறது, அதனைத்தொடர்ந்து அடுத்த கிளிப்பில் அது அவரை விரட்டிக்கொண்டு செல்கிறது. அவர் கரடி குட்டிக்கு பயந்து ஒரு மேடையின் மீது ஏறி நிற்கிறார், இருப்பினும் அது அவரை பிடிக்க முயல்கிறது.
Baby panda vs Zoo Negara zookeeper. Too cute! pic.twitter.com/2WVvkiFgud
— Ngidam (@ngidamMY) April 10, 2022
இந்த வீடியோ இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காட்சிக்கு பின்னணியாக அமைக்கப்பட்டுள்ள இசை இந்த வீடியோவிற்கு ஊடுதல் பலத்தை அளிக்கிறது. இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது, பாண்டா கரடி குட்டியின் செயலை கண்ட பலரும் சிரிப்பு எமோஜிகளை கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR