இந்த எருமையின் விலை 23 கோடியா! என்ன காரணம் தெரியுமா?

அன்மோல் என்ற எருமையின் மதிப்பு சுமார் 23 கோடி ரூபாய் ஆகும். இதனை வைத்து 2 Rolls-Royces மற்றும் 10 Mercedes பிற விலை உயர்ந்த கார்களை வாங்க முடியும்.  

Written by - RK Spark | Last Updated : Oct 20, 2024, 06:06 PM IST
  • இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த எருமை.
  • 2 ரோல்ஸ் ராய்ஸ், 10 மெர்சிடிஸ் கார்கள் வாங்கலாம்.
  • இணையத்தில் வைரல் ஆகும் அன்மோல் எருமை.
இந்த எருமையின் விலை 23 கோடியா! என்ன காரணம் தெரியுமா? title=

மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அகில இந்திய விவசாயிகள் கண்காட்சி மற்றும் வேளாண் வணிகக் கண்காட்சி என்ற மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. ஹரியானா மாநிலம் சிர்சாவைச் சேர்ந்த 'அன்மோல்' என்ற சிறப்பு வாய்ந்த எருமை இந்த கண்காட்சியின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். அன்மோல் மிகவும் விலை உயர்ந்தது, அதன் விலை இரண்டு ஃபேன்சி ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மற்றும் பத்து மெர்சிடிஸ் கார்கள் வாங்குவதைவிட அதிகம். அதன் விலையில், உண்மையில் டெல்லியில் உங்களால 20 சொகுசு வீடுகளை வாங்க முடியும். இந்த சிறப்பு வாய்ந்த அருமையான அன்மோலைப் பார்க்க பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக அதன் விலையை கண்டு வியப்படைகின்றனர்.

மேலும் படிக்க | CPR செய்து பாம்புக்கு உயிர் தந்த நபர்: நம்ப முடியாத வைரல் வீடியோ

cow

அன்மோல் விலை எவ்வளவு?

இன்றைய மதிப்பில் அன்மோல் எருமையை அதன் உரிமையாளர் விற்றால் சுமார் 23 கோடிக்கு போகும். இதில் 15 ஆடம்பரமான Mercedes-Benz கார்களை வாங்க முடியும் அல்லது அந்த பணத்தில் சிலவற்றைப் பயன்படுத்தி இரண்டு ஆடம்பரமான Rolls Royce கார்களை கூட வாங்கலாம். அன்மோல் சாதாரண உணவுகளை சாப்பிடுவதில்லை, அதற்கென சிறப்பு உணவு உள்ளது. அன்மோலை கவனித்து வரும் ஜகத் சிங்கின் கூற்றுப்படி, அன்மோல் அதன் எட்டு ஆண்டுகளில் நிறைய பரிசுகளை வென்றுள்ளது. ஒவ்வொரு நாளும், அன்மோல் 5 கிலோகிராம் பால், 4 கிலோகிராம் சுவையான மாதுளை, 30 வாழைப்பழங்கள், வலுவான தசைகளை வளர்க்கும் 20 முட்டைகள் மற்றும் சிறிது பாதாம் மற்றும் சிறப்பு உணவுகளை எடுத்து கொள்கிறது. அன்மோல் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்து, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க கடுகு மற்றும் பாதாம் எண்ணெயுடன் நன்றாக மசாஜ் செய்யப்படுகிறது.

அன்மோலின் விந்து மிகவும் சிறப்பு வாய்ந்தது

அன்மோல் மிகவும் பெரிய மற்றும் ஈர்க்கக்கூடிய எருமை, அதனை பலரும் பார்க்க விரும்புகின்றனர். ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 லட்சம் ரூபாய்க்கு மக்கள் இந்த எருமையின் விந்தணுக்களை வாங்கி செல்வதாக சிங் தெரிவித்துள்ளார். இந்த விந்தணுவை சேகரித்து சிர்சாவைச் சேர்ந்த ஒரு குழு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அன்மோல் முர்ரா இனத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது, இது அதன் விந்துவை அரிதாகவே வெளியிடுகிறது. இந்த எருமையின் உரிமையாளர் அதற்கு உணவுக்காக மாதம் 60,000 ரூபாய் வரை செலவிடுகிறார். மேலும் அதன் விந்து விற்பதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 4-5 லட்சம் லாபம் வரை லாபம் பெறுகிறார்.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண்காட்சியில், லட்சுமி மற்றும் ராணி என்று அழைக்கப்படும் இரண்டு இரட்டை எருமை மாடுகள் இருந்தன. அவற்றையும் அனைவரும் பார்க்க விரும்பினர். இவை தினமும் 30 லிட்டர் வரை பால் கொடுக்கின்றன.  மேலும் பல மாடுகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. கண்காட்சியில் சிறப்பு வாய்ந்த அன்மோல் எருமை மாடுகளை காண பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் பலர் அன்மோலுடன் புகைப்படம் எடுத்தனர், சிலர் செல்பி எடுத்து கொண்டனர். உத்தரபிரதேசத்தின் விவசாய அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி மற்றும் மாநில அமைச்சர் பல்தேவ் அவுலாக் இந்த நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

மேலும் படிக்க | பானிபூரி சாப்பிடவே இனி யோசிப்பீர்கள்... இப்படியா மாவு பிசைவீங்க - ஷாக் வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News