காட்டுக்கு ராஜான்னாலும் கட்டுபாடு இருக்குல்ல! யானையின் குரலுக்குக் கட்டுப்படும் ராஜா குடும்பம் வீடியோ வைரல்...

Google Trending Lions Hunt Video : ரொம்ப சீரியஸான நேரத்தில் ஆசுவாசம் கிடைத்தால் அப்பாடா என்று நிம்மதியாக இருக்கும் அல்லவா? அப்படி ஒரு வீடியோவை பார்த்து ரசிக்கலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 14, 2024, 10:43 PM IST
  • ஒரே பிளிறலில் மிருகங்களை அடக்கும் யானை!
  • யானை வைரல் வீடியோ!
  • ஆளைப் பார்க்காமலேயே சப்தத்திலேயே சப்தநாடியும் ஒடுங்குமா?
காட்டுக்கு ராஜான்னாலும் கட்டுபாடு இருக்குல்ல! யானையின் குரலுக்குக் கட்டுப்படும் ராஜா குடும்பம் வீடியோ வைரல்... title=

Elephant Viral Video : ஆளைப் பார்க்காமலேயே சப்தத்திலேயே சப்தநாடியும் ஒடுங்குமா? ஒடுங்குமே.... ஒரு பிளிறலில் சிங்கங்கள் அடங்கிவிடுமா? அடங்காப்பிடாரிகளையும் அடக்கும் யானையின் வீர வீடியோ வைரல் ஆகிறது. இந்த வீடியோ ரொம்ப சீரியஸான நேரத்தில் ஆசுவாசம் கிடைத்தால் அப்பாடா என்று நிம்மதியாக இருக்கும் அல்லவா? அப்படி இருக்கிறது.

யானை என்றால் மனிதர்களுக்கு மட்டுமன்றி மிருகங்களுக்கும் பயம் தான் போல என தோன்ற வைக்கும் வீடியோ இது. விலங்குகளில் புத்திசாலியானது என்று கருதப்படும் யானை, சண்டையை எப்படி தீர்த்து வைப்பது என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறது பாருங்களேன்...

மேலும் படிக்க | Viral Video : “காலுக்கு மசாஜ் பண்ணு...” பாகனிடம் செல்லமாக சேட்டை செய்த யானை!

பதற வைக்கும் சிங்கங்கள்

 சிங்கக் கூட்டம் ஒன்று எருமையைச் சுற்றி வளைத்து அதை வேட்டையாடத் தொடங்கிய நிலையில், யானை வந்து ஆட்டத்தை மாற்றிய வீடியோ பார்க்க நன்றாக இருக்கிறது. சில நிமிடங்கள் தாமதமாகியிருந்தால், பாவம் எருமை, உணவாகியிருக்கும். காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன.

திகிலூட்டும் காட்சிகளும் கூடிய வீடியோக்களை பலரும் பார்த்து பரவச்ப்படுகின்றனர்.

எருமை வேட்டைக்கு கிளம்பிய சிங்கங்கள் 
சமூக வலைதளங்களில் பயனாளிகளின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த வீடியோவை பார்க்கும்போது, ​​சிங்கங்கள் கூட்டம் இரை தேடி காட்டில் அலைவது போல் தெரிகிறது. திடீரென்று அவற்றின் கண்கள் எருமையின் மீது விழுகின்றன. பிறகு அனைவரும் திட்டம் போட்டு எருமையைச் சுற்றி வளைத்துவிட்டன.

ஆனால் விதி வேறு எதையோ வைத்திருந்தது. திடீரென காட்டு யானை ஒன்று எருமை மாட்டை காப்பாற்ற வந்தது. யானையைக் கண்டவுடன் சிங்கங்கள் துண்டைக்காணோம், துணியைக் காணோம் என்று பறந்துவிட்டன. 

மேலும் படிக்க | மூச்சுவிடும் பூமி... இணையத்தில் வைரலாகும் அதிசய வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News