தண்டவாளத்தில் மாட்டிய நாய்... எதிரில் வந்த விரைவு ரயில்: மனதை உலுக்கிப்போடும் வைரல் வீடியோ

Dog Viral Video: சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளிவரும் சில வீடியோக்கள் நம் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றன. அதில் இந்த வீடியோவும் ஒன்று.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2023, 10:25 AM IST
  • ரயில் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட நாய்.
  • தண்டவாளத்தில் சிக்கிய நாயின் மனம் பதபதைக்க வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்.
  • வீடியோ வைரல் ஆனது.
தண்டவாளத்தில் மாட்டிய நாய்... எதிரில் வந்த விரைவு ரயில்: மனதை உலுக்கிப்போடும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளிவரும் சில வீடியோக்கள் நம் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றன. இவற்றின் உணர்வுப்பூர்வமான அம்சங்கள் என்றும் நம் மனதில் தங்கி விடுகின்றன. வியக்கத்தக்க வகையில் இருக்கும் இந்த வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு அதிசயிக்கவும் வைக்கின்றன. 

சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு வீடியோவும் அந்த வகையில் தான் உள்ளது. இதில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள அபூர்வமான பந்தத்தை காண முடிகின்றது. இந்த வீடியோ காண்பவர்களின் இதயங்களை வெல்லும் வகையில் உள்ளது. மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கு இடையில் இருக்கும் பிணைப்பு அபூர்வமானது. இதற்கு சான்றாக பல வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களில் தினம் தினம் காண்கிறோம்.

சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவும் இதையே எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. இந்த வீடியோவில் ஒரு நாயின் கால் ரயில் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டுள்ளதையும், அதை எடுக்க சில நபர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து முயற்சி செய்வதையும் காண முடிகின்றது.

ரயில் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்ட நாய்

மனதை உலுக்கும் வகையில் உள்ள இந்த வீடியோவில், ஒரு நாயின் கால் ரயில் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டுள்ளதை காண முடிகின்றது. அது தன்னை விடுவித்துக்கொள்ள படாத பாடு படுகின்றது. சரியாக அந்த வேளையில் அங்கு சில நபர்கள் வருகிறார்கள். நாயின் கால் மாட்டிக்கொண்டுள்ளதை காணும் நபர்கள் அந்த நாயை காப்பாற்ற முயல்கிறார்கள். ஆனால், அதில் அவர்களது உயிர்களுக்கும் ஆபத்து உள்ளது என்பதும் அவர்களுக்கு புரிந்துதான் இருக்கிறது. ஏனெனில், அவர்களை நோக்கி மின்னல் வேகத்தில் ஒரு விரைவு ரயில் வந்துகொண்டு இருக்கிறது. எனினும், அவர்கள் நாயை காப்பாற்றும் முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து தண்டவாள கம்பிகளை நீக்கி நாயின் காலை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். வீடியோவில் நாயின் உயிரை காப்பாற்ற தங்கள் உயிரை பணயம் வைக்கும் இந்த நபர்கள் நம் கண்களுக்கு தெய்வங்களாகவே தெரிகிறார்கள். 

தண்டவாளத்தில் சிக்கிய நாயின் மனம் பதபதைக்க வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:

கால்கள் தண்டவாலத்தில் சிக்கி இருக்க, வலியால் துடிக்கும் நாய் உதவிக்காக அங்கும் இங்கும் பார்ப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இதற்கிடையில், முன்பக்கத்திலிருந்து முழு வேகத்தில் ஒரு ரயில் வருகிறது. மறுபுறம், சிலர் நாயைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் என்ன நடக்குமோ என்ற பதட்டமும், அச்சமும் ஏற்படுகின்றது. இறுதியில் நாயின் உதவிக்காக வந்த நபர்கள் செய்யும் கடின உழைப்பு பலனளிக்கிறது. தண்டவாளங்களுக்கு இடையில் இருந்து நாயின் கால் வெளியே எடுக்கப்படுகின்றது. சரியான நேரத்தில் அந்த நாய்க்கு உதவ மக்கள் முன்வரவில்லையென்றால் அதற்கு என்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கவே மனம் பதபதைக்கின்றது. 

மேலும் படிக்க | தண்ணீர் குடிக்க லைனாக வந்த சிங்க கூட்டம்: வைரல் வீடியோ

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் zindagii.gulzar.haandzindagi.gulzar.h என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இது அதிகம் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவுக்கு இதுவரை ஏகப்பட்ட வியூஸ்களும் 1 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. வீடியோவின் தலைப்பில், 'தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் இந்த நாயின் உயிரைக் காப்பாற்றிய நல்ல உள்ளங்கள்' என்று எழுதப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'அந்த நாயை காப்பாற்றிய நபர்கள் உண்மையில் தெய்வங்கள்தான்.'ஏன ஒரு பயனர் குறியுள்ளார். ‘இவர்கள்தான் உண்மையான சூப்பர் ஹீரோக்கள்' என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | சாகசம் செய்த புல்லட் பாண்டி மல்லாக்க விழுந்த வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News