கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகளை இழந்தனர். ஏற்கனவே நோயாளிகளாக இருப்பவர்களுக்கு கொரோனாவும் ஏற்பட்டது, அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் தொற்று நோயால் கர்ப்பிணிப் பெண்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தது போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் இப்போது மிகவும் வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் கோமா நிலைக்கு சென்றார். தடுப்பூசி ஏதும் போடாத நிலையில் அந்த பெண் கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.
ALSO READ | கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!
தி சன் பத்திரிக்கையில் வெளியான செய்தி அறிக்கையில், இந்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த கெல்சி ரூட்ஸ் (Kelsie Routs) 28 வார கால கர்ப்பிணியாக இருந்தபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். பெண்ணின் உடலுக்கு ஓய்வு தேவை என்பதற்காக அவளை செயற்கையாக மருத்து சிகிச்சைக்காக கோமா நிலைக்கு அனுப்பினார்.
ஆனால் அவள் சுயநினைவு பெற்றபோது, தான் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக மருத்துவர்கள் கூறியதை கேட்ட போது, அந்தப் பெண்ணின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில் அவசர சிகிச்சையாக சிசேரியன் செய்து அவருக்கு பிரசவம் செய்தபோது கெல்சி இன்னும் சுயநினைவில்லாமல் இருந்தார். கெல்சிக்கு மருத்துவர் பிரசவம் குறித்து கொடுத்த தேதிக்கு 12 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்து 7 நாட்களுக்கு பிறகு தான் அவர் கோமாவிலிருந்து வெளியே வந்தார். ஆனால், அவரது மகளைப் பார்த்ததும் அவருடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
இது குறித்து அந்த பெண் கூறுகையில், என்னையும் என் பெண் குழந்தையையும் காப்பாற்ற டாக்டர்கள் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளனர் என்று எனக்கு தெரியும் என்றார். மூன்று குழந்தைகளின் தாயான கெல்சி, மருத்துவர்கள் என் உயிரையும் என் குழந்தையையும் காப்பாற்றியது ஒரு "அதிசயம்" என்றார்.
ALSO READ | Viral Photos: மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR