ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்கோர்களை குவித்த டாப் 8 அணிகளை இங்கு காணலாம்.
தற்போது 9ஆவது டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
8. 2016ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 209 ரன்களை அடித்தது, இந்த பட்டியலில் 8ஆவது இடத்தை பிடித்தது.
7. 2021ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் இந்தியா 210 ரன்களை அடித்தது, இந்த பட்டியலில் 7ஆவது இடத்தை பிடித்துள்ளது.
6. 2009ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 211 ரன்களை அடித்தது, இந்த பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.
5. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் 218 ரன்களை அடித்தது, இந்த பட்டியில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளது.
4. 2007ஆம் ஆண்டு டர்பன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 218 ரன்களை அடித்தது, இந்த பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது.
3. 2016ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 229 ரன்களை அடித்தது, இந்த பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது.
2. 2016ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 230 ரன்களை அடித்தது, இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.
1. 2007ஆம் ஆண்டு ஜோகனன்ஸ்பர்க்கில் நடைபெற்ற கென்யாவுக்கு எதிரான போட்டியில் 260 ரன்களை அடித்தது, இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.