உங்க லேப்டாப் ரொம்ப சூடாகுதா... பிரச்சனையை தீர்க்க சில டிப்ஸ்..!

இன்றைய கால கட்டத்தில், கம்ப்யூட்டர் என்னும் கணினி இல்லாத இடமே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. பள்ளியில் படிப்பவர்கள், அலுவலக வேலை என கணினியை நம்பித் தான் பிழைப்பு உள்ளது.

 

ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருள் என்ற நிலைக்கு வந்து விட்ட கம்யூட்டர் வகைகளில், பிசி எனப்படும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. 

 

1 /8

கல்வி கற்பவர்கள் முதல் அலுவலக பணி செய்பவர்கள் வரை, சிறிய பெட்டிக் கடை முதல், மிக பெரிய மால் வரை கணிணி எங்கு நீக்கமற நிறைந்துள்ளது. லேப்டாப் அல்லது கணிணி, பழுதானால், பல முக்கிய வேலைகளை செய்ய முடியாமல் பிரச்சனைகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.  

2 /8

லேப்டாப்கள் சூடாவது மிகவும் பொதுவான பிரச்சனை. சில நேரங்களில் லேப்டாப் வாங்கி பல வருடங்கள் ஆன நிலையில் அதிலுள்ள சாஃப்ட்வேர் காரணமாக சூடாகலாம். அல்லது லேப்டாப்பிற்குள் போதுமான காற்றோட்டம்  போதுமானதாக இல்லாத நிலையில் சூடாகலாம்.  

3 /8

மடிக்கணினி என்னும் லேப்டாப்பை படுக்கையில் அல்லது சோபாவில் வைத்து பயன்படுத்தும் போது, காற்றோட்டம் சரியாக இல்லாததன் காரணமாக, அதிக வெப்பமடைந்து, சரியாக வேலை செய்யாமல் போகலாம்

4 /8

லேப்டாப்பை அதிக நேரம் தொடர்ச்சியாக பயன்படுத்துவது நல்லதல்ல. 8 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக பயன்படுத்தினால், அதிகம் சூடாகும். லேப்டாப் ஆயுள் நீடிக்க, உபயோகிக்காத நேரத்தில் ஷட் டவுன் செய்வது அவசியம்.

5 /8

லேப்டாப் சூடாகாமல் இருக்க அதன் கீழ் போதுமான காற்றோட்டத்தை வழங்க லேப்டாப் கூலிங் பேடை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது.  

6 /8

லேப்டாப் சூடாகாமல் இருக்க அதில் பொருத்தப்பட்டுள்ள ஃபேனில் தூசி படிந்திருக்கலாம் அல்லது  உடைந்திருக்கலாம். இந்த லேப்டாப் ஃபேனை சரி செய்வதன் மூலம் அதிகம் சூடாவதைத் தடுக்கலாம்.

7 /8

நாளாக நாளாக உங்கள் லேப்டாப்பில் தேவையற்ற கோப்புகள் மற்றும் புரோகிராம்கள் குவிந்து விடும். இது உங்கள் கணினியின் வேகத்தைக் குறைக்கும். தேவையில்லாத  கோப்புகள் மற்றும் பைல்களை நீக்குவதன் மூலம் லேப்டாப்பில் ஸ்பேஸ் அதிகம் கிடைப்பதோடு வேகமும் அதிகரிக்கும்.  

8 /8

சில மணி நேரத்தில் லேடப்டாப்பை அணைக்காமல், பல மணி நேரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அதன் செயல்பாட்டின் வேகம் குறைந்து விடும்.