நீங்கள் தினமும் மெட்ரோவில் பயணம் செய்பவர் என்றால், இது உங்களுக்கான நற்செய்தி. ஏனெனில் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (DMRC) டெல்லி மெட்ரோ-எஸ்பிஐ கார்டு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ உதவியுடன் ப்யூர் ப்ளே கிரெடிட் கார்டை (Pure Play Credit Card) வழங்கியுள்ளது. இதில் பல சலுகைகளும் உள்ளன.
இது பல வகையில் பயன்படுத்தப்படும் கார்டு டெல்லி மெட்ரோ பயணிகளுக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும். டெல்லி மெட்ரோ-எஸ்பிஐ கார்டை தில்லி மெட்ரோவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மங்கு சிங் மற்றும் எஸ்பிஐ கார்டின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஸ்வானி குமார் திவாரியும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இது Contactless கார்டு. இது கிரெடிட் கார்டு மற்றும் மெட்ரோ ஸ்மார்ட் கார்டு வசதியை வழங்குகிறது. டெல்லி மெட்ரோவிலிருந்து தினசரி பயணிக்கும் பயணிகளை மனதில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எஸ்பிஐ கார்டு தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி நிறுவனம் கூறுகையில், இது ஒரு பல பயன்பாடுகளுக்கான அட்டை என்றும் இது கிரெடிட் கார்டாகவும், மெட்ரோ ஸ்மார்ட் கார்டாகவும் பயன்படுத்தலாம் என கூறியுள்ளது. இந்த அட்டை NFC தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக எந்த மேற்பரப்பையும் தொடாமல் உபயோகிக்க முடியும். இந்த அட்டையின் வருடாந்திர கட்டணம் 499 ரூபாய் தான் என்பதோடு, இதில் பல சிறப்பு சலுகைகளையும் வங்கி வழங்கியுள்ளது.
இந்த அட்டையில் இன்னும் பல சலுகைகளும் கிடைக்கின்றன. முதல் ஆட்டோ டாப் அப் பரிவர்த்தனையில் ரூ.50 கேஷ்பேக் மற்றும் மெட்ரோவில் பயணம் செய்வதற்கு 10 சதவீதம் தள்ளுபடி ஆகியவை இதில் அடங்கும்.
எஸ்பிஐ கார்டு தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வானி குமார் திவாரி கூறுகையில், தில்லி மெட்ரோவின் கூட்டணியுடன், மெட்ரோவில் பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார்.