ஆர்ஜே பாலாஜிக்கு 'யூத் ஐகான் விருது' வழங்கி கெளரவிப்பு !

ஆர்ஜே பாலாஜிக்கு ‘யுத் ஐகான் விருது’ வழங்கி கௌரவப்படுத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன்.ஆர்ஜே பாலாஜி ஒருமாபெரும் நடிகர் மற்றும் இயக்குநர், அதையும்தாண்டி சிறந்த பொழுதுப்போக்காளர். மேலும் அறிவோம்.

1 /8

ஒன்பதாவது லீடர்ஷிப் சப்மிட் 2024 விழா கோவையில் ஐசிடி அகாடெமியில்  நேற்று   நடைப்பெற்றது.   

2 /8

 இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு நல்ல வேலைக்கூடங்கள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றது எனக் கூறுகின்றனர்.

3 /8

இந்த விருது வழங்கும் விழாவில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

4 /8

லீடர்ஷிப் சப்மிட் இவ்விழாவில் மணவர்களிடம் அடுத்த தலைமுறை தலைவர்களாக வருவதற்கு  ஊக்குவிப்பது குறித்து பல்வேறு தலைவர்கள் மாணவர்களிடம் பகிர்ந்தனர்.  

5 /8

ஆர்ஜே பாலாஜி மானவர்கள் முன் மேடையில் கம்பீரமாக பேசி அசத்தியுள்ளார். அப்போது அவர் கூறியது “இளைஞர்களிடம் அவர்களது கனவுகளை அடைய உதவ வேண்டும் என்ற உந்துதலை இது வழங்குகிறது” என்று கூறியுள்ளார். மேலும் மாணவர்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு  இந்த விழாவில் பல்வேறு கலந்துரையாடல்கள் நடைப்பெற்றது.

6 /8

நடிகரும், இயக்குநருமான  ஆர்ஜே பாலாஜிக்கு  ‘யூத் ஐகான் 2024 விருது’வழங்கப்பட்டது. இந்த விருதினை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், டாக்டர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் ஆர்ஜே பாலாஜிக்கு வழங்கி கெளரவித்தார். 

7 /8

ஆர்ஜே பாலாஜிக்கு இந்த விருது வழங்கக் காரணம் இவர் முயற்சிகளை மதிப்பதோடு சமூகத்திலும், திரைத்துறையிலும்  நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

8 /8

ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, “இந்த விருதைப் பெற்றதில் எனக்குப் பெருமையாக உள்ளது. மேலும்  சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து உழைக்க எனக்கு இது உத்வேகம் கொடுத்துள்ளது என இவ்வாறு கூறினார்.