மழைக்காலத்தில் பால் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க இதை செய்யுங்கள்..!

மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் ஏற்ற இறக்கமான வெப்பநிலை காரணமாக பால் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. 

 

மழைக்காலத்தில், பால் சார்ந்த உணவுகள் மற்றும் பால் அடிக்கடி வழக்கத்தை விட வேகமாக கெட்டுவிடும். அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை மாற்றம் விரைவாக கெட்டுப்போவதற்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால், பாலை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

 

1 /7

பால் நீண்ட நேரம் எல்லாம் புத்துணர்ச்சியுடன் இருக்காது. சீக்கிரம் கெட்டுபோகக்கூடியது தான் என்றாலும், ஈர்பதம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இயல்பைவிட இன்னும் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது. 

2 /7

மழைக்காலத்தில் பால் சீக்கிரம் கெட்டுப்போவதுடன், அதில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியும் விரைவாக இருக்கும். இதனால் பாலை எப்போதும் பிரிட்ஜில் குளிர்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும். 

3 /7

வெளியில் இருக்கும் ஏற்ற  இறக்கமான வெப்ப நிலை பாலுக்கு உகந்ததாக இருக்காது. கூடுதலாக மழைக்காலத்தில் மின் தடைகளும் ஏற்படுவது வழக்கம். அப்படியான சூழலிலும் பால் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது.   

4 /7

சுத்தமாக கழுவாத பாத்திரத்தில் பால் ஊற்றி வைத்தால் அப்போதும் கெட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது. பால் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

5 /7

40 °F (4 °C)க்கும் குறைவான வெப்பநிலையில் பாலை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். அடிக்கடி பிரிட்ஜை திறக்கிறீர்கள் என்றால் பாலை உட்புறத்தில் வைத்துவிடுங்கள். மின்சாரம் தடைபட்டிருக்கும் நேரத்தில் பிளாஸ்க் போன்ற பாத்திரங்கள் இருந்தால் அதில் ஊற்றி பாலை சேமித்து வைத்துவிடுங்கள்

6 /7

திறந்த பாத்திரத்தில் பாலை எப்போதும் வைத்திருக்காதீர்கள். பிரிட்ஜில் வைத்தாலும் பாலை மூடிய பாத்திரத்திலேயே வைத்துவிடவும். அதற்கு முன்னதாக பிரிட்ஜ் சுத்தமாக பராமரிக்கப்படுவதை  உறுதிப்படுத்துங்கள். 

7 /7

ஒருவேளை பால் கெட்டுப்போய் இருந்தால் அதனை கீழே ஊற்ற கொஞ்சம் கூட தயங்காதீர்கள். கெட்டுப்போன பாலை சாப்பிடுவது உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் தீங்கானது.