Due date-க்கு முன்னர் ப்ரீமியம் செலுத்தினால் discount உட்பட பல நன்மைகள் கிடைக்கும்

Insurance Premium News: நீங்கள் மாத சம்பளம் பெறும் தொழிலில் இல்லை என்றால், அதாவது, உங்கள் வருவாய்க்கு ஒரு நிலையான கால அவகாசம் இல்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். 

காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பபான IRDAI இப்போது உங்கள் பாலிசியின் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்த ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

1 /5

IRDAI-யின் இந்த புதிய திட்டத்தின் கீழ், நீங்கள் பிரீமியத்தை உரிய தேதிக்கு (Due date) முன் செலுத்தினால், உங்கள் பிரீமியத்தில் ​​நீங்கள் தள்ளுபடி பெற முடியும், அல்லது பிரீமியம் டெபாசிட் செய்யப்படுவதற்கு முந்தைய காலத்திற்கு வட்டி செலுத்தப்படும். IRDAI தனது திட்டத்தை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுடன் விவாதித்துள்ளது. அதன் வரைவு சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

2 /5

புதிய விதியை அமல்படுத்துவதற்குப் பின்னால் IRDAI-வின் நோக்கம் மக்களின் ஆயுள் காப்பீட்டுக் கொள்கை காலாவதியாகக்கூடாது என்பதுதான். அதே நேரத்தில், காப்பீட்டு நிறுவனங்களின் பணிகளும் இடையூறு இல்லாமல் தொடர்ந்து வளர வேண்டும் என்ற நோக்கமும் உள்ளது.

3 /5

இந்த முடிவின் மூலம் மாத சம்பளம் பெறாத நபர்கள் இனி பாலிசியின் டியூ டேட் வரை காத்திருக்க வேண்டியதில்லை. இந்த முடிவின் காரணமாக, மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப காப்பீட்டு பிரீமியத்தை டெபாசிட் செய்து தங்கள் பாலிசிகளை பாதுகாக்க முடியும் என்று IRDAI நம்புகிறது.

4 /5

இதில், முன்கூட்டியே பிரிமியத்தை டெபாசிட் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு வட்டி இழப்பு இருக்காது. இதன் மூலம் பாலிசிதாரருக்கு, ஒன்று, பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும் அல்லது வங்கி விகிதத்தில் வட்டி வழங்கப்படும்.

5 /5

இதில் வட்டி இந்த வகையில் கணக்கிடப்படும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) இன் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி கிடைக்கும் வட்டி விகிதத்தையும் அந்த வட்டி விகிதத்தில் 1 சதவீதத்தையும் சேர்த்து, காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரருக்கு வட்டி செலுத்த வேண்டி இருக்கும். அதே நேரத்தில், உரிய தேதிக்கு முன்னர் செலுத்தப்படும் பிரீமியம் பற்றி காப்பீட்டு நிறுவனங்கள் 7 நாட்களுக்குள் IRDAI-க்கு தகவல்களை வழங்க வேண்டும்.