மும்பையில் இருந்து விலகும் ரோஹித் சர்மா... ரெடியாக இருக்கும் இந்த 5 அணிகள் - யாருக்கு கிடைக்கும் லக்?

Rohit Sharma IPL 2025 Mega Auction: ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி மெகா ஏலத்திற்கு முன் விடுவிக்கும் என கூறப்படும் நிலையில், அவரை அணியில் எடுக்க காத்திருக்கும் 5 அணிகள் குறித்து இங்கு காணலாம்.

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் அணிகள் தங்களின் வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த விதிமுறைகள் ஆகியவை பற்றி, ஐபிஎல் கமிட்டியுடன் அனைத்து அணிகளும் நாளை மறுதினம் ஜூலை 31ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளன. 

 

 

1 /8

ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வாங்கித் தந்தவர். கேப்டனாக பொறுப்பேற்ற 2013ஆம் ஆண்டே முதல் கோப்பையை அவர் பெற்றுத் தந்தார். அதன்பின் 2015, 2017, 2019, 2020 என அடுத்தடுத்து கோப்பையை வென்று மிரட்டியது.   

2 /8

ஆனால் கடைசியாக அந்த அணி கோப்பையை வென்று நான்கு வருடங்கள் ஆகிறது. முன்னதாக, 2024ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கியது. அதுவும் குஜராத் அணியில் இருந்து டிரேட் செய்து அவர் கேப்டனாக அமரவைத்தது, இருப்பினும் கடைசி இடத்தில் மும்பை நிறைவு செய்தது.   

3 /8

இந்நிலையில், மும்பை அணி இம்முறை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோரை தக்கவைக்க வேண்டும் என்பதால் கடந்த 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன் ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டதை போல் இம்முறை ரோஹித்தை விடுவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ரோஹித் விடுவிக்கப்பட்டால் அவரை ஏலத்தில் எடுக்க இந்த 5 அணிகள் கடுமையாக போராடும் அவற்றை இங்கு காணலாம்.   

4 /8

பஞ்சாப் கிங்ஸ்: இந்த அணியில் ஒரு பலமான கேப்டனும், பேட்டரும் தேவை. ஷிகர் தவாண், சாம் கரண் ஆகியோர் 2024 சீசனில் கேப்டன் செய்தாலும் ரோஹித்தை பஞ்சாப் அணி எடுக்க முயற்சிக்கும்.  

5 /8

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: இந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல், அந்த அணியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனால், அந்த இடத்திற்கு லக்னோ ரோஹித்தை முயற்சிப்பார்கள்.  

6 /8

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாப் டூ பிளெசிஸ் இம்முறையும் தொடர வாய்ப்பிருக்கிறதா என்பது பெரிய கேள்வியாக இருப்பதால், விராட் கோலி இருக்கும் அணியில் ரோஹித்தையும் கொண்டு வந்தால் ஆர்சிபி அணியின் கோப்பை கனவு நனவாகலாம்.  

7 /8

டெல்லி கேப்பிடல்ஸ்: அந்த அணிக்கும் ரிஷப் பண்டுக்கும் பிரச்னை என்பதால் ஏலத்திற்கு முன் அவர் விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. எனவே, ரோஹித்தை எடுக்க முயற்சிப்பார்கள்.  

8 /8

சென்னை சூப்பர் கிங்ஸ்: இது நடக்கவே நடக்காது என தோன்றினாலும், ஐபிஎல் ஏலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ரோஹித் சர்மா ஒருவேளை ஏலத்தில் வந்தால் சிஎஸ்கே நிச்சயம் ரோஹித்துக்குச் செல்லும்.