Rahu Transit 2023: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. இது கிரகப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சனி பகவான் மிகவும் மெதுவாக, அதாவது இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார். மறுபுறம், ராகு மற்றும் கேது கிரகங்கள் எப்போதும் வக்ர நிலையில், ஒன்றரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகின்றன. ஜோதிடத்தில், ராகு நிழல் கிரகமாக கருதப்படுகின்றது.
ராகு கிரகம் 30 அக்டோபர் 2023 அன்று ராசியை மாற்றப் போகிறது. இந்து பஞ்சாங்கத்தின்படி, அக்டோபர் 30 ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 1.33 மணிக்கு ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். ராகுவின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், 4 ராசிக்காரர்கள் ராகுவின் சஞ்சாரத்தால் பெரிதும் பலன் அடைவார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் ராகுவின் சஞ்சாரத்தால் சுப பலன்களைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் கிடைக்கும். இது பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகுவின் ராசி மாற்றம் அதிக பலன் தரும். கூட்டாண்மையில் செய்யப்படும் ஒவ்வொரு வேலையும் வெற்றியடைவதோடு பெரும் நிதி ஆதாயமும் உண்டாகும். இந்தக் காலக்கட்டத்தில் புதிய தொழிலையோ அல்லது கூட்டுத் தொழிலையோ தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
ராகுவின் சஞ்சாரத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். எதிர்பாராத பண ஆதாயத்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அதன் காரணமாக பொருளாதார நிலை மேம்படும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுவார். இத்தகைய சூழ்நிலையில், மீன ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. முதலீடு செய்ய சிறந்த நேரமாக இது இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.