Vastu Tips: இந்த 5 மரங்களையும் செடிகளையும் வீட்டில் ஒரு போதும் வைக்கக் கூடாது..!!

பெரும்பாலான மக்கள் வீட்டில் மரங்களையும் செடிகளையும் வீட்டில் வளர்க்க விரும்புகிறார்கள். சில செடிகள் மற்றும் மரங்கள், வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் அதே நேரத்தில், ​​சில செடிகள் அவற்றுடன் எதிர்மறை சக்தியைக் கொண்டு வருகின்றன. இதன் காரணமாக பண இழப்பு ஏற்படுகிறது.

 

அலங்காரம், நேர்மறை ஆற்றலுக்காக நாம் பெரும்பாலும் வீட்டில் செடிகளை வளர்க்க விரும்புகிறோம். சில மரங்களையும் செடிகளையும் வளர்ப்பது நன்மை பயக்கும் அதே வேளையில், வீட்டில் சில மரங்களையும் செடிகளையும் தீங்கு விளைவிக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. சில மரங்கள் மற்றும் செடிகளில் வாஸ்து தோஷம் உள்ளது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அவற்றை வீட்டில் பயன்படுத்துவதால் பணம் விரயம் மற்றும் புகழுக்கு இழுக்கு ஆகியவை ஏற்படுகிறது. இதுபோன்ற சில மரங்கள் மற்றும் செடிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1 /5

வாஸ்து சாஸ்திரத்தின்ப்படி, வீட்டில் அரச மரம் வைப்பது தீங்கு விளைவிக்கும். இதனால் பண விரயம் அல்லது பண பிரச்சனை ஏற்படலாம். அரச மரம் கோவிலில் தான் இருக்க வேண்டும்.

2 /5

வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டில் பேரீச்சை மரத்தை வைப்பதாலும் பணத் தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது. பனைமரம் இருக்கும் வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படுவதோடு, தலைக்கு மேலே கடனும் அதிகரித்துக்கொண்டே போகும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது தவிர, வீட்டு உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

3 /5

கற்றாழை செடி மிகவும் துரதிர்ஷ்டவசமானதாக கருதப்படுகிறது. வீட்டில் கற்றாழை செடியை வைத்தால், பணம் வீட்டில் தங்காது என்றும், இதன் காரணமாக, நிதி சிக்கல்கள் நீடிக்கும் எனவும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.  

4 /5

மூங்கில் மரம் துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகிறது. வீட்டில் மூங்கில் மரங்களை நடக்கூடாது என வாஸ்து சாஸ்திரம் மற்றும் இந்து மதத்தின்  நம்பிக்கைகள் கூறுகின்றன. இதனால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும். இந்து மதத்தில், மூங்கில் ஒருவர் இறக்கும் போது தான் பயன்படுத்தப்படுகிறது.

5 /5

எளந்தை மரத்தை ஒருபோதும் தவறுதலாக கூட வீட்டில் வைக்கக் கூடாது. இதை வீட்டில் பயன்படுத்துவது வறுமைக்கு வழிவகுத்து வீட்டின் அமைதியை சீர்குலைக்கிறது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.