மிகக்குறைந்த விலையில், தினமும் 1ஜிபி தரவு, இலவச காலிங், இன்னும் பல வசதிகள்: அசத்தும் Jio

ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்: ரிலையன்ஸ் ஜியோ குறைந்த  விலையில் அதிக நன்மைகளை வழங்குவதில் பெயர் பெற்றது. ஜியோவில் பல மலிவான திட்டங்கள் உள்ளன. இவற்றில் அதிக தரவு வசதியுடன் வரம்பற்ற அழைப்புகளுக்கான வசதியும் கிடைக்கின்றன. 

1 /4

இந்த பதிவில் ஜியோவின் ரூ.200-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ரீசார்ச் திட்டங்கள் பற்றி பார்க்கலாம். இவற்றில் தினமும் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் இன்னும் பல வசதிகள் கிடைக்கின்றன. குறைந்த கட்டணம் கொண்ட மாதாந்திர திட்டம் உங்களது தேவையாக இருந்தால், இந்தத் திட்டம் உங்களுக்கான சிறந்த திட்டமாக இருக்கும்.

2 /4

ஜியோ ஃபோனின் ரூ.186 திட்டத்தில், பயனர்கள் 28 நாட்களுக்கான வேலிடிட்டியைப் பெறுகிறார்கள். மேலும், இந்த திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டாவும் கிடைக்கும். அதாவது, இந்த திட்டத்தில் மொத்தம் 28 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.  ஒரு நாளின் தரவு முடிந்த பிறகு, இணைய வேகம் @ 64 Kbps ஆக குறைகிறது. அதாவது தினசரி டேட்டா முடிந்த பிறகும் இந்த திட்டத்தில் இணைய வசதியைப் பெற முடியும். 

3 /4

தரவு வசதியைத் தவிர, ரூ.186 திட்டத்தில் பயனர்கள் வரம்பற்ற அழைப்பு வசதியையும் பெறுகிறார்கள். பயனர்கள் அனைத்து நெட்வொர்க்கிலும் இலவச அழைப்புகளை செய்ய முடியும். இதனுடன் இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கிறது. இது தவிர, ஜியோ மூவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தாவும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

4 /4

ஜியோ ரூ.299 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது, இதில் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், எஸ்எம்எஸ் வசதிகள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா போன்ற சில ஜியோ சலுகைக்கான அணுகலும் கிடைக்கிறது.