ஐபிஎல்லில் புதிய ட்விஸ்ட்? ஆர்சிபி அணிக்காக விளையாடப்போகும் சஞ்சு சாம்சன்?

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

 

1 /6

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025 ஏலத்தின் தேதியை பிசிசிஐ இன்னும் உறுதிப்படுத்தவில்லை, இருப்பினும் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.  

2 /6

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வரவிருக்கும் ஐபிஎல் 2025ல் ஆர்சிபி அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.   

3 /6

இருப்பினும் இதன் உண்மை தன்மை தெரியவில்லை. தற்போது சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் மற்றும் முக்கிய பேட்டராக உள்ளார்.   

4 /6

இதற்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2018 மெகா ஏலத்தில் சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்ய முயன்றது, ஆனால் இறுதியில் ராஜஸ்தான் அணி அவரை ரூ.8 கோடிக்கு வாங்கியது.   

5 /6

2021 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் சஞ்சு சாம்சன். ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் மற்றும் சஞ்சு சாம்சனை தக்க வைக்க ஆர்ஆர் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது.   

6 /6

சஞ்சு சாம்சன் 2013 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். பின்னர் 2016 முதல் 2017 வரை டெல்லி அணிக்காக விளையாடினார். பின்னர் மீண்டும் 2018ல் ராஜஸ்தான் அணிக்கு திரும்பினார்.