Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி யாரெல்லாம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai,) கோரி யாரெல்லாம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் இதுவரை கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களில் யாரெல்லாம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு ஏற்கனவே விண்ணப்பித்து, அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அந்த பெண்கள் மீண்டும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஆனால் எந்த காரணத்துக்காக உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்டு அதில் தவறு இருக்கும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
ஒருவேளை கலைஞர் உரிமைத் தொகை தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தால் என்னென்ன தகுதிகள் நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என முதலில் பார்க்க வேண்டும். ஆண்டு உட்சபட்ச வருமானம், ரேஷன் கார்டு, உங்களிடம் உள்ள நிலம் உள்ளிட்ட விதிமுறைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை பார்க்க வேண்டும்.
ஒருவேளை தவறான காரணங்கள் கூறி உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அந்த காரணம் தவறு என்பதை சுட்டிக்காட்டி மேல்முறையீடு செய்யலாம். அதிலும் உங்கள் விண்ணப்பம் மீது எந்த ரிசல்டும் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் இதுவரை கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாம். யார் விண்ணப்பித்தாலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அது என்னவென்றால், பெண்களுக்கு 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். நன்செய் நிலங்கள் 5 ஏக்கர், புன்செய் நிலங்கள் 10 ஏக்கருக்கு மிகாமல் இருக்க வேண்டும். கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது. ஜிஎஸ்டி மற்றும் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி அதற்காக தொழில் வரி செலுத்துபவர்களாக இருக்கக்கூடாது.
மேலும், மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியில்லாதவர்கள். அரசின் வேறு ஏதேனும் ஓய்வூதியம் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.
எனவே இந்த விதிமுறைகள் எல்லாம் உங்களுக்கு பொருந்துகிறது என்றால் நீங்கள் கட்டாயம் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் வட்டார அலுவலகத்துக்கு நேரடியாக சென்று தங்கள் விண்ணப்பம் தவறான காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என்பதை ஆவணங்களுடன் எடுத்துக் கூறவும் செய்யலாம்.