குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி? 8 வழிகள் இதோ!

How To Make Kids Interested In Studies : குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் வரவழைக்க நாம் சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? 

How To Make Kids Interested In Studies : குழந்தைகள் என்பவர்கள், சிறு வடிவில் இருக்கும் மனிதர்கள்தான். இவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் விவரிப்பதற்கு வேறு அனுகுமுறையை பின்பற்ற வேண்டுமே அன்றி, எதையும் விவரிக்க கூடாது என்ற அவசியம் இல்லை. அனைவருக்குமே படிப்பு மிகவும் அவசியம். குழந்தைகள், தங்களது பள்லியில் கொடுக்கும் வேலைகளை செய்வதற்கு எப்போதும் ஆர்வம் காண்பிப்பர் என்று கூற முடியாது. அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

1 /8

அன்றாட அனுபவங்கள் மூலம், உங்கள் குழந்தைக்கு பாடங்களை கற்பிக்க வேண்டும். அப்போது அவர்களால் மிக எளிமையாக படிப்பை தலையில் ஏற்றிக்கொள்ள முடியும். 

2 /8

விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கு படிப்பை கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். ஆன்லைன் Quiz உள்ளிட்ட விஷயங்களை அவர்களுக்கு இண்ட்ரொ செய்யலாம். 

3 /8

குழந்தைகளுக்கு ஆர்வத்தை தூண்டும் விஷயங்களை படிப்பில் சேர்க்க வேண்டும். கேள்வி பதில் மூலம் படித்தல், மைண்ட் மேப் போடுவது உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தலாம். 

4 /8

டெக்னாலஜியை சரியான முறையில் கையாள குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு வேகமாக படிப்பு ஏறும். 

5 /8

உங்கள் குழந்தைகள் செய்யும் சிறு சிறு வெற்றிக்களையும் கொண்டாட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நன்றாக முன்னேற நீங்கள் மோட்டிவேட் செய்தது போல இருக்கும். 

6 /8

குழந்தைகள், படிப்பில் தவறு செய்தால் அதை பாசிடிவான முறையில் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அந்த தவறை திருத்திக்கொள்ள அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். 

7 /8

வெறும் எழுத்து மூலமாக மட்டுமல்லாமல், ஆக்டிவிட்டி மூலமாகவும், ப்ராஜெக்ட்கள் மூலமாகவும் படிப்பை புகுத்த வேண்டும். 

8 /8

பிற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்க உங்கள் குழந்தையை ஊக்குவிக்க வேண்டும்.