வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டம்! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government Latest News: வேலைவாய்ப்பு இல்லாத தமிழ்நாட்டு இளைஞர்கள் மாத உதவித் தொகை பெறுவது குறித்து அரசு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

Unemployment Scholarship Scheme Latest News: தமிழ்நாடு அரசு வழங்கும் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவது எப்படி?

1 /8

இது குறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.12.2004 அன்றைய தேதியில் ஐந்து வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மேல்நிலை வகுப்பு (+2), பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தருதி உடையவர் ஆவர்.

2 /8

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு (+2) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 11.12.324 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவின் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 

3 /8

அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை (CAP) பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர். உதவித்தொகை பெற தகுதியில்லை. 

4 /8

பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

5 /8

பொதுப்பிரிவு | பந்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை(SSLC-Failed) -  ரூ. 200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு( SSLC-Passed)  - ரூ.300, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(HSC-Passed} - ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) - ரூ.600 கிடைக்கும்.

6 /8

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் | எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு - ரூ.600, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(HSC-Passed} -  ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) - ரூ.1000 கிடைக்கும். சிறப்பு நேர்வாக மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மாதாந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

7 /8

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்பஅட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து, விண்ணப்பப்படிவத்தை வசிக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம். 

8 /8

விண்ணப்பதாரர் அரசு துறை/தனியார் துறையிலும் எவ்வித ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயதொழில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது. ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர் மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப் படிப்புகள் முடித்தர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெறு நகுதியில்லை என தெரிவிக்கப்படுகிறது.