Saturn Transit: சனி தேவன் தற்போது தனது ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனி பகவான், டிசம்பர் 27ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு 2025 புத்தாண்டு அட்டகாசமான தொடக்கமாக இருக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் சஞ்சாரம் அனைத்து ராசிகளுக்கு ஏதோ ஒரு வகையில் பலனைக் கொடுக்கும் என்றாலும், சனியின் இந்த நட்சத்திர சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என்கின்றனர் ஜோதிடர்கள். இவர்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்த இன்னல்கள் அனைத்தும் நீங்கி நல்ல காலம் பிறக்கும் எனலாம்.
Saturn Transit: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுக்கும் கிரகம் சனி. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 2025ம் ஆண்டில் கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சனி பெயர்ச்சி 2025, மார்ச் 29, தேதி அன்று நடக்கும். ஆனால் அதற்கு முன், 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சனி தனது நடசத்திரத்தை மாற்றுகிறார்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: 2025ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் முன், டிசம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை, சனி பகவான், பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். தற்போது சனி பகவான் சதய நட்சத்திரத்தில் இருக்கிறார். சனியின் இந்த நட்சத்திர மாற்றத்தால் 5 ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு சிறப்பாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியினால் புத்தாண்டுக்கு முன், சில நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறந்த வகையில் நேரத்தை செலவிட முடியும். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். கடின உழைப்பால் பணியில் வெற்றி பெற முடியும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம். குடும்பத்தினருடன் நல்லுறவு இருக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியினால் பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் புதிதாக ஏதாவது முயற்சி செய்ய நினைத்தால், அதற்கு பலன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சனியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தாண்டுக்கு முன் சில அங்கீகாரங்களையும் சலுகைகளையும் பெற முடியும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியினால், ஆதாயங்கள் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். பரஸ்பர உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். கைக்கு வராதம் இருந்த பணம் மீட்கப்படும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும். முன்பை விட தன்னம்பிக்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
மகர ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியினால், நன்மை உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி வரலாம். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். கடனில் இருந்து விடுதலை பெறலாம். தொழில் ரீதியாக நேரம் நன்றாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
கும்ப ராசியினருக்கு பூர்வபாத்ரபாத நட்சத்திரத்தில் சனியின் பிரவேசம் பலன் தரும். பணியிடத்தில் வெற்றி பெறலாம். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அமையும். வீடு, சொத்துகளில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்கும் திட்டம் தீட்டலாம். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக செய்து முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.