40 வயதுக்கு பின்னரும் நச்சுனு வாழ... இந்த பழத்தின் ஜூஸை அப்பப்ப குடிங்க!

Health Benefits Of Kiwi Fruit Juice: கிவி பழத்தின் ஜூஸை குடிப்பதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். குறிப்பாக, 40 வயது தாண்டினோர் இதனை மருத்துவ ஆலோசனை பெற்று குடிக்கலாம். 

  • Feb 26, 2024, 16:10 PM IST

கிவி கடைகளில் எளிதாக கிடைக்கும் பழங்களில் ஒன்று. இதனை அப்படியே சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மையே, இருப்பினும், கோடை காலத்தில் இந்த பழத்தை ஜூஸாக போட்டுக் குடிப்பது கூடுதல் நன்மையை தரும். 

 

 

1 /7

Health Benefits Of Kiwi Fruit Juice: இந்த கோடை விடுமுறையில் பழங்கள் சாப்பிடுவதை அல்லது அதனை ஜூஸாக சாப்பிடுவதை நீங்கள் வழக்கமாக்கி கொள்வது நல்லது. அந்த வகையில், கிவி பழம் ஜூஸையும் அடிக்கடி குடியுங்கள். கிவி பழம் குறித்து பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதனை வீட்டில் வாங்கி வந்து சாப்பிடுவது என்பது அரிதானதாகும். எனவே, கிவி பழத்தை ஜூஸாக குடியுங்கள்.   

2 /7

கிவி பழத்தை நீரில் நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். மேலும், நல்ல சுத்தமான ஸ்பான்ஞ் போன்றவற்றால், அதன் தோல் பகுதியில் காணப்படும் சிறுமுடி போன்றவற்றை அகற்றிட வேண்டும். கடினமான மேற்புறத்தை வெட்டி அகற்றிய பின்னர், அதன் நன்கு பழுத்த பகுதியை தனியாக எடுத்து ஜூஸாக போட்டுக் குடிக்கலாம். கிவி பழ ஜூஸை குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இஙஅகு காணலாம்.   

3 /7

கண்களுக்கு ஏற்றது: வயதானவர்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க கிவி பழ ஜூஸை அடிக்கடி குடிக்கலாம்.   

4 /7

நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாம்: கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு இதனை குடித்தலா கட்டுக்குள் இருக்கும்.   

5 /7

ரத்த அழுத்தத்தை குறைக்கும்: கிவி பழத்தில் போட்டாஸியம் அதிகம் இருப்பதால், ரத்தத்தில் உள்ள சோடியத்தின் தாக்கத்தை குறைத்து அதிக ரத்த அழுத்தத்தை தவிர்க்க உதவும், சோடியம் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.   

6 /7

இதயத்திற்கு ஏற்றது: போட்டாஸியம் இதில் அதிகம் உள்ள காரணத்தால் கொலஸ்ட்ரால் குறையும், இது இதயத்திற்கும் நல்லதாகும்.   

7 /7

பொறுப்பு துறப்பு: கிவி பழம் ஜூஸை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் பார்த்தோம். இந்தச் செய்தி வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.