அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் - கோபமடைந்த ரஜினிகாந்த்!

கூலி படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் தாய்லாந்து செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது அவர் இனி அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

1 /6

சென்னை சென்னை விமான நிலையத்தில் இருந்து கூலி படம் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

2 /6

அப்பொழுது பேசிய அவர், கூலி திரைப்படத்தில் 70 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளது என்றும், வரும் 13 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார்.

3 /6

அரசியில் தொடர்பான கேள்விகளை கேட்ட போது, அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று பலமுறை உங்களிடம் தெரிவித்து விட்டேன் என்று காட்டமாக ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

4 /6

அவரது ரசிகர்கள் தொடர்ந்து தலைவா தலைவா என உரக்க கத்தியதால், முகம் சுழித்த ரஜினி அப்படி கத்த வேண்டாம் என்று தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டார்.

5 /6

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து ரஜினியின் கேட்கப்பட்ட போது, அப்படியா? எப்போது நடந்தது என்று கேட்டார் ரஜினி.  

6 /6

அந்த சம்பவம் விமர்சனங்களுக்கு உள்ளானதால் அதில் இருந்து செய்தியாளர்களை தவிர்த்து வருகிறார். அப்படியே பேசினாலும் அரசியல் கேள்விகளை தவிர்த்து வருகிறார்.