Health Benefits Of Palm Jaggery: பனை வெல்லம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கக் கூடியது என்றாலும் இதனை கோடைக்காலத்தில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
Health Benefits Of Palm Jaggery: பனை வெல்லும் சாப்பிடுவதன் மூலம் இந்த 7 நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். வெல்லம் சாதாரண பலசரக்கு கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை பல இடங்களில் கிடைக்கும்.
சத்துக்கள் நிறைந்தது: இதில் இரும்புச்சத்து, போட்டாஸியம், மேக்னீஸியம், கால்சியம் என உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்கிறது. இது கோடைக்காலத்தில் வியர்வை மூலம் சத்துகளை உடல் இழக்கும் நிலையில், பனை வெல்லம் சாப்பிட்டால் இப்பிரச்னை தீரும்.
கெட்டதை நீக்கும்: பனை வெல்லம் உங்களின் கல்லீரலை சுத்தப்படுத்த உதவும். குறிப்பாக கல்லீரலின் செயல்பாட்டை அதிகரித்து உங்களின் உடல்நலத்தை பேணும்.
நோய் எதிர்ப்பு சக்தி: பனை வெல்லத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி நோய்களிடம் இருந்து உங்களை காக்கும்.
செரிமானம்: கோடை காலத்தில் பலருக்கும் செரிமானம் சார்ந்த பிரச்னைகள் வரும். பனை வெல்லத்தை சாப்பிடுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவும் சுரபிகள் சுரக்க இது வழிவகை செய்யும். இதனால் செரிமானம் சார்ந்த பிரச்னைகள் உங்களை அண்டாது.
எனர்ஜி கிடைக்கும்: பனை வெல்லத்தில் கார்போஹைட்ரேட் நிறைய உள்ளது. இது உடலுக்கு சட்டென எனர்ஜியை அளிக்கும். இதனால், கோடை காலத்தில் சோர்வாக இருந்தால் வெல்லத்தை கொஞ்சம் சாப்பிடுங்கள்.
நீர்ச்சத்து: பனை வெல்லத்தில் நீர்ச்சத்து அதிகமிருக்கிறது. இது கோடை காலத்தின் உடல் நீரேற்றமாக இருக்க உதவும்.
குளிர்ச்சி தரும்: வெல்லம் உடலுக்க குளிர்ச்சித் தரக்கூடிய பொருளாகும். எனவே, இதனை கோடைக் காலத்தில் தவிர்க்கவே கூடாது. உடல் வெப்பத்தை சீராக வைப்பதன் மூலம், கோடை வெப்பம் சார்ந்த நோய் உங்களை அண்டாது.