Guru Peyarchi Palangal: குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் ராசி மாற்றம் கிரக பெயர்ச்சி என்று அழைக்கப்படுகின்றது. ராசிகளை தவிர கிரகங்களின், நட்சத்திரம், உதய, அஸ்தமான நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மே ஒன்றாம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சியானார். சுமார் ஒரு ஆண்டு காலம் அவர் இந்த ராசியில் இருப்பார். இதற்கிடையில் அவர் பல வித மாற்றங்களை மேற்கொள்வார்.
வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி குரு பகவான் மிருகசிரீட நட்சத்திரத்தில் பெயர்ச்சியாக உள்ளார். குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு வியாபாரம் விருத்தி அடையும். அந்த ராசிகளைப் (Zodaic Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மிருகசிரீட நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் அதிசயங்களை செய்யும். நிதி நிலை வலுவாக இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். சமூக அந்தஸ்த்து உயரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். செல்வச் செழிப்பு கூடும். வியாபாரத்தில் லாபம் பெருகும். நிலம், வாகனம் வாங்கலாம். மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி: மிருகசிரீட நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி அடையப் போவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய முதலீடு மூலம் லாபம் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். சமூகப் பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். தொழிலில் வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். தொழில் வலுவாக நடக்கும்.
மகரம்: குரு நட்சத்திர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழிலில் புதிய சாதனைகளை செய்வீர்கள். பொருளாதார நிலை மேம்படும். நிதி ஆதாயம் உண்டாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு பெறுவீர்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
குரு பகவானின் அருள் பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.