Sunrise And Sunset: சூரியன் ஒரு நாளைக்கு ஒரு முறை உதிப்பதுதானே வழக்கம்? பூமியில் மனித நடவடிக்கைகள் அதற்கேற்ப நடக்கின்றன. ஆனால் ஒரு விண்வெளி வீரர் விண்வெளிக்குச் செல்லும்போது, அவருக்கு இரவும் பகலும் எப்படித் தெரியும்?
இந்த கேள்விக்கு காரணம் ஒரு நாளைக்கு சூரியன் பல முறை உதித்து மறைந்தால் அதை ஒரு நாள் என்று எப்படி மனிதர்கள் புரிந்துக் கொள்வது?
பூமியில் இருக்கும்போது இயல்பாக இருக்கும் அனைத்து விஷயங்களுமே, விண்வெளியில் மாறித்தான் இருக்கும். விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்லும்போது முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வாழ வேண்டும்
முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை என்றால் அதன் ஆழத்தை புரிந்துக் கொள்ள ஒரே ஒரு விசயம் போதும். ஒரு நாளைக்கு சூரியனின் உதயத்தையும், அஸ்தமனத்தையும் அவர்கள் பல முறை பார்க்க வேண்டும்
பூமியில் இருப்பதைப் போன்றே, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இருக்குமா என்றால் அதுவும் இல்லை!
விண்வெளி வீரர்கள் விண்வெளி மையத்தில் வசிக்கின்றனர். அந்த மையமானது, சுமார் 400 கி.மீ உயரத்தில் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வருகிறது
விண்வெளி வீரர்கள் ஒரு நாளில் 16 முறை சூரிய உதயத்தையும் அதே எண்ணிக்கையில் சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கிறார்கள். சர்வதேச விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி மணிக்கு சுமார் 27 ஆயிரம் கி.மீ வேகத்தில் பயணிக்கிறது
ISS நிலையம், பூமியை சுமார் 90 நிமிடங்களில் சுற்றி வருகிறது, இதனால் விண்வெளி நிலையம் பாதி நேரம் சூரிய ஒளியிலும் பாதி நேரம் நிழலிலும் இருக்கும்.
ISS சுமார் 45 நிமிடங்கள் சூரிய ஒளியிலும், 45 நிமிடங்கள் இருளிலும் இருக்கும். விண்வெளி நிலையம் பூமியை 16 முறை சுற்றி வருவதால், விண்வெளி வீரர்கள் சூரிய உதயத்தை 16 முறையும், சூரிய அஸ்தமனத்தை 16 முறையும் பார்க்கிறார்கள்.
ஆரம்பத்தில் 16 முறை சூரிய உதயம், அஸ்தமனம் பார்ப்பது நல்லது ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அது ஒரு தண்டனையாகிவிடும். உதாரணமாக, விண்வெளி வீரர்களின் உறக்கம் வெகுவாக பாதிக்கப்படும்