பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் உட்பட உங்கள் பட்ஜெட் வரம்பிற்கு ஏற்ற பல மின்சார ஸ்கூட்டர்கள் உள்ளன.
இது தற்போது மின்சார வாகனங்களின் யுகமாகும். இன்னும் சில நாட்களின் இந்த துறையில் அதிக முன்னேற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்தியாவில் அதிக அளவிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது இல்லை. ஆனால் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் உட்பட உங்கள் பட்ஜெட் வரம்பிற்கு ஏற்ற பல மின்சார ஸ்கூட்டர்கள் உள்ளன.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான TVS மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய இரு நிறுவனங்களும் மின்சார வாகன பிரிவில் நுழைந்தன. இரு நிறுவனங்களும் தங்களது ஒரே மின்சார ஸ்கூட்டர்களான ஐக்யூப் (iQube) மற்றும் சேத்தக் (Chetak) ஆகியவற்றை அறிமுகப்படுத்தின. இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. இரண்டு ஸ்கூட்டர்களையும் பற்றி அறிந்து கொள்வோம்.
TVS iQube-ல் 4.4 கிலோவாட் சக்தி வாய்ந்த மின்சார மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் வெறும் 4.2 வினாடிகளில் 40 கிமீ வேகத்தை எட்டும். இது 2.25 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. நிறுவனம் இந்த ஸ்கூட்டரை ஒரு சிறப்பு SmartXonnect இயங்குதளத்தில் வடிவமைத்துள்ளது. இதில் மேம்பட்ட டிஎஃப்டி கிளஸ்டர் மற்றும் இணைப்பு அம்சங்களும் உள்ளனர். இது பகல் மற்றும் இரவு டிஸ்பிளே, கியூ-பார்க் அசிஸ்ட், மல்டி-செலக்ட் எகனாமி மற்றும் பவர் மோட் மற்றும் ரீஜெனரேடிவ் பிரேக்கிங் போன்ற சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இது இந்த ஸ்கூட்டரை தனித்துவமானதாக்குவதோடு வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளையும் விருப்பங்களையும் வழங்குகிறது.
புதிய பஜாஜ் சேத்தக் இந்திய சந்தையில் அர்பன் மற்றும் பிரீமியம் என இரண்டு வகைகளில் வருகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கி.மீ வரையிலான வரம்பை வழங்குகிறது. இதில் இரண்டு ரைடிங்முறைகள் (riding modes) கிடைக்கின்றன. சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகியவை இதில் அடங்கும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.1 கிலோவாட் மின்சார மோட்டார் உள்ளது. இது 16Nm அளவிலான உச்ச டார்க்கை உருவாக்குகிறது. சார்ஜ் நேரம் பற்றி பேசினால், இதை சாதாரண 5A பவர் சாக்கெட் மூலம் 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். மேலும், 1 மணி நேரத்தில் 25 சதவீதம் வரை இதை சார்ஜ் செய்து விடலாம். இந்த மின்சார ஸ்கூட்டர் ஒரு மணி நேரத்தில் 25 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படுகிறது. எனினும், முழுமையாக சார்ஜ் (Full charge) செய்யப்பட இதற்கு 5 மணி நேரம் எடுக்கும்.
வேகமாக முன்னேறி வரும் TVS iQube மற்றொரு வெற்றியை அடைந்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் மொத்தம் 1,110 யூனிட்களை நிறுவனம் இதுவரை விற்பனை செய்துள்ளது. மார்ச் மாதத்தில் ஐக்யூப்பின் 355 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனினும், பஜாஜ் சேத்தக்கின் 90 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.