7th Pay Commission: ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகை எவ்வளவு முக்கியமானது? அதன் பலனை யார் பெறுவார்கள்? இந்த டிஏ அரியர் தொகை எவ்வளவு நன்மையைத் தரும்?
7th Pay Commission, DA Arrears: DA மற்றும் DR நிலுவைத் தொகையின் கீழ் யாருக்கு பலன் கிடைக்கும்? நாட்டின் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 65 லட்சம் மத்திய ஓய்வூதியர்களும் இதன் பலனைப் பெறுவார்கள். இது தவிர, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (PSU) ஊழியர்களுக்கும், மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கும் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனுடன் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களும் DA மற்றும் DR நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.
7வது ஊதியக் குழு: அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண நிலுவைத் தொகை தொடர்பாக நீண்ட நாட்களாக காத்திருந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது. இது அவர்களுக்கு சற்று நிவாரணம் தரும் வகையில் அமைந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக நிலுவைத்தொகை தொடர்பாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது 18 மாத நிலுவைத் தொகைக்கான முன்மொழிவு அரசுக்கு வந்துள்ளது. இந்த நிலுவைத் தொகை லட்சக்கணக்கான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களுக்கு இந்த நிலுவைத் தொகை எவ்வளவு முக்கியமானது? அதன் பலனை யார் பெறுவார்கள்? இந்த டிஏ அரியர் தொகை எவ்வளவு நன்மையைத் தரும்? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்ட போது அனைத்து நாடுகளிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்திய அரசு, அப்போது ஏற்பட்ட அசதாரண சூழ்நிலையை சமாளிக்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ/டிஆர் அதிகரிப்பை முடக்கியது.
இந்த முடக்கம் காரணமாக, ஜூலை 2020 முதல் டிசம்பர் 2021 வரையிலான 18 மாதங்களுக்கு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை அரசு அளிக்காமல் அந்த தொகையை அதிக தேவையில் இருந்த நலிந்த பிரிவு மக்களின் நலத்திட்டங்களுக்காக செலவழித்தது.
கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி அரியர் தொகையை அளிக்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. தற்போது இந்த 18 மாத டிஏ அரியர் தொகையை விடுவிக்க அரசு தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டின் இதற்கான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது நடந்தால், இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவதோடு, அவர்களது கணக்கில் பெரிய தொகை டெபாசிட் செய்யப்படும்.
DA மற்றும் DR நிலுவைத் தொகையின் கீழ் யாருக்கு பலன் கிடைக்கும்? நாட்டின் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 65 லட்சம் மத்திய ஓய்வூதியர்களும் இதன் பலனைப் பெறுவார்கள். இது தவிர, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (PSU) ஊழியர்களுக்கும், மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கும் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனுடன் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களும் DA மற்றும் DR நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.
DA/DR நிலுவைத் தொகை எவ்வாறு கணக்கிடப்படும்? DA/DR நிலுவைத் தொகையானது ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இதில் பின்வரும் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன: முதலில் DA/DR விகிதம் ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரை 17% ஆக இருந்தது. அதன் பிறகு 2021 ஜனவரியில் 28% ஆகவும் பின்னர் ஜூலை 2021 இல் 31% ஆகவும் அதிகரித்தது. அதன் அடிப்படையில் 18 மாத நிலுவைத் தொகையை ஊழியர்கள் பெறுவார்கள்.
நிலுவைத் தொகையிலிருந்து பெறப்படும் பலன், ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் பொறுத்து இருக்கும். லெவல் 1 பணியாளர்கள் தோராயமாக ரூ.11800 முதல் அதிகபட்சமாக ரூ.37554 வரை பெறுவார்கள். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.144,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.
லெவல் 14 ஊழியர் குறைந்தபட்சம் ரூ.1,82,200 முதல் அதிகபட்சமாக ரூ.2,24,100 வரை பெறுவார். இருப்பினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தோராயமானவை. பணியாளர்கள் பெறக்கூடும் உண்மையான தொகை மாறுபடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.