Brain Booster: மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவும்... சில காலை பழக்கங்கள்

Brain Health Tips: உடலின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மூளை உடலில் ஆற்றல் மையமாக விளங்கும் மூளையின் கட்டளைப்படி தான் உடல் செயல்படுகிறது. அதனால் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். சில காலை பழக்கங்கள் மூளைக்கு ஆற்றலை கொடுத்து நினைவாற்றல் அதிகரிக்க உதவும்.

மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும் ஆரோக்கியமான காலை பழக்கங்கள், மூளைக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், மூளை தொடர்பான பிரச்சனைகளான மறதி நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளின் ஆகிய ஆபத்துக்கள் பெருமளவு குறையும்.

1 /8

Brain Health Tips: மூளை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும், முதுமையிலும் நினைவாற்றல் ஆரோக்கியமாக இருக்கவும் சில விஷயங்களை நாம் பழக்கமாக ஆக்கிக் கொண்டால், அது உங்கள் உடலை மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்திருக்கும். அந்த வகையில், மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் காலைப்பழக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

2 /8

அதிகாலை விழித்தல்: இரவில் நன்றாக தூங்கிய பின்னார், அதிகாலை விழித்தல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிகாலை தூக்கம் மூளையை மந்தமாக்கும். அதனால், அதிகாலை எழுந்திருப்பது அவசியம். இரவு மிகவும் லேட்டாக தூங்கி, காலையில் லேட்டாக எழுந்திருக்கும் பழக்கம் அளவிற்கு அதிகமான சோம்லைக் கொடுத்து மூளையை மந்தமாக்கும்.

3 /8

உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள்: காலையில் எழுந்தவுடனே உடற்பயிற்சியுடன் அன்றைய தினத்தை தொடங்கினால், உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆரோக்கியமாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சிகள், ஜாகிங் அல்லது லைட் வாக்கிங் செய்யலாம். 

4 /8

தியான பயிற்சி: இந்த பரபரப்பான வாழ்க்கையில், உடல் மட்டுமல்ல மனமும் சிறிது ஓய்வெடுக்க வேண்டும். இதற்கு தியான பயிற்சியை விட சிறந்தது எதுவுமில்லை. எனவே காலையில் சிறிது நேரம் எடுத்து சுவாச பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஆன்மீக வழியிலும் தியானம் செய்யலாம். இது உங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.

5 /8

சத்தான காலை உணவு: நாளின் முதல் உணவான காலை உணவு நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, காலை உணவு, அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். அதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் மூளையை கூர்மையாக்கவும் நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவும்

6 /8

மூளைக்கான பயிற்சி: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடல் பயிற்சிகளை செய்வது போல, நமது மன ஆரோக்கியத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில மனப் பயிற்சிகளை நமது அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு, நீங்கள் எந்த புதிர்கள் அல்லது செஸ் போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளை விளையாடலாம். 

7 /8

காலை சூரிய ஒளி: தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் லேசான சூரிய ஒளியில் உட்காரவும். இது உங்கள் உடலுக்கு வைட்டமின் டி வழங்குவது மட்டுமல்லாமல், உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது. தினமும் பத்து நிமிடம் கூட வெயிலில் அமர்ந்தால், மூளையில் டோபமைன் ஹார்மோனின் அளவு சரியாக இருக்கும், இதனால் உங்கள் மனம் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.