கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் அதிகமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. முதல் அலை முடிவடைந்து 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும், மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு வரவில்லை. இதற்கிடையில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான மாஸ்டர் (Master Movie) திரைப்படம் மீண்டும் மக்களை திரையரங்குகளுக்கு வரவைத்தது. அதன் பிறகு வெளியான படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக ஓரளவிற்கு வெற்றி பெற்றது.
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு திரையரங்குகளில் அதிகமாக வசூல் சாதனை செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து 2வது இடத்தில் தீபாவளி தினத்தில் வெளியான ரஜினியின் அண்ணாத்த (annaththe) திரைப்படம் உள்ளது. மூன்று மற்றும் நான்கு இடங்களில் சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் சிம்புவின் மாநாடு திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
5, 6 மற்றும் 7வது இடத்தில் கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன், சுந்தர்சி யின் அரண்மனை 3 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. 8, 9 மற்றும் 10 வது இடத்தில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன், விஷாலின் எனிமி மற்றும் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படம் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் கடந்த வருடம் திரையரங்கில் அதிக வசூல் செய்த படங்களை ஒவ்வொரு திரையரங்கும் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டது. அதில் அனைத்து திரையரங்குகளிலும் விஜய்-யின் மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 'சாணிக்காயிதம்' படத்தின் OTT உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR