வாரிசு படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்..! குஷ்பூ-வுக்கு மட்டும் லட்சத்தில்

வாரிசு படத்திற்கு விஜய் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குஷ்பூவுக்கு லட்சத்தில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 9, 2023, 07:38 PM IST
வாரிசு படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம்..! குஷ்பூ-வுக்கு மட்டும் லட்சத்தில் title=

விஜய்யின் வாரிசு பொங்கல் விருந்தாக ரிலீஸாக இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு களமிறங்குகிறது. இரண்டு படங்களுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைனில் டிக்கெட் ஒன்றின் விலை ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் ரசிகர்கள் முட்டி மோதி படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். ஹவுஸ்புல் காட்சிகளாக பொங்கலன்று துணிவு மற்றும் வாரிசு ஓட இருக்கிறது என்பது இப்போது உறுதியாகிவிட்டது. 

வாரிசுக்கு ஏற்பட்ட சிக்கல்

ஆனால் இந்த பொங்கல் ரேஸில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு இன்னும் இரண்டு இரவுகள் மட்டுமே இருக்கிறது. வாரிசு படத்தைப் பொறுத்தவரை பல பிரச்சனைகளுக்கு இடையே பொங்கல் ரிலீஸை உறுதி செய்திருக்கிறது. துணிவு படம் முன்கூட்டியே பொங்கல் ரிலீஸூக்கு உறுதி செய்யப்பட்டதால், வாரிசுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் சிக்கல் முடிவுக்கு வந்து வாரிசின் பொங்கல் ரிலீஸூம் உறுதியானது.

மேலும் படிக்க | KGF 3 படத்தில் ராக்கி பாய் இல்லையா? அதிருப்தியில் யாஷ் ரசிகர்கள்!

வாரிசு ரிலீஸ் உறுதி 

ஆனாலும் பல மாவட்டங்களில் துணிவுக்கு நிகரான தியேட்டர்கள் வாரிசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் மற்றும் செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனங்கள் இரண்டு படத்துக்குமான தியேட்டர்கள் சரிபாதி பிரித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியானாலும் இந்த ஆண்டு பொங்கல் துணிவு மற்றும் வாரிசு ரசிகர்கள் எந்த குறைவும் இல்லாமல் கொண்டாடலாம். 

விஜய் சம்பளம்

வாரிசு படத்துக்கு விஜய்க்கு சுமார் 110 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது முந்தைய படத்தை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராஷ்மிகாவுக்கு 4 கோடி ரூபாயும், சரத்குமாருக்கு 2 கோடி, பிரகாஷ்ராஜ்க்கு 1.5 கோடி, ஷாமுக்கு 1 கோடி என சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. யோகி பாபு 35 லட்சம் இருக்கலாம் என்றும், குஷ்பூவுக்கு 40 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

மேலும் படிக்க | துணிவு vs வாரிசு டிக்கெட் விலை! ரூ.750 - ரூ.2000..! ரசிகர்களுக்கு பிம்பிலிக்கா பிலாபி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News