DD Dhivyadharshini Talks About Her Father : தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் டிடி. இவரது முழு பெயர், திவ்ய தர்ஷினி. ஆனால், தான் தொகுத்து வழங்கும் ஷோக்களில் அவரை டிடி என்று அறிமுகப்படுத்தியதால் அதுவே அவரது செல்ல பெயராக மாறியது.
அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சி தொகுப்பாளர்..
தற்போது உள்ள நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பலர், தான் நேர்காணல் காணும் செலிப்ரிட்டிகளை டென்ஷனாக்கும் அளவிற்கு கேள்விகளை கேட்பர். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர்களுக்கு பேச விருப்பம் இல்லை என்றாலும் அதை குறித்தே கேட்டு, அவர்களை கோப்படுத்துவர். ஆனால், யாரையும் அப்படி சங்கடப்படுத்தாத திரை பிரபலங்களுள் ஒருவர் டிடி. இதனாலேயே இவருக்கு பல திரை பிரபலங்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இதனால் இவரை பிரபலங்களுக்கு மட்டுமன்றி, ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.
விவாகரத்து..ஆட்டோ இம்யூன் பிரச்சனை..
டிடி, தான் பணிபுரிந்த சேனலில் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக வலம் வந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட போது அந்த திருமணத்தை திருவிழா போல கொண்டாடினர். 3 நாட்கள் நடைப்பெற்ற இந்த திருமணத்தை, சேனலில் டெலிகாஸ்டும் செய்தனர். டிடிக்காக பிரத்யேகமான நிகழ்ச்சி அனைத்தும் கூட நடத்தப்பட்டது. திருமணம் முடிந்தும் தனது பணியை தொடர்ந்து செய்து காெண்டிருந்த டிடி, தொடர்ந்து தனது சிக்னேச்சர் ஷோவான காஃபி வித் டிடி நிகழ்ச்சியை தாெடர்ந்து கொண்டிருந்தார்.
மூன்று வருட கால விவாகரத்திறகு பிறகு இவருக்கு 2017ஆம் ஆண்டு, விவாகரத்து நடந்தது. இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருந்தது. இதையடுத்து, சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கு ஆட்டோ இம்யூன் நோய் தாக்கியது. இதனால் உடைந்து போனார்.
மேலும் படிக்க | கில்லி படத்தின் ஹாலிவுட் வெர்ஷன்! விஜய்யாக நடிக்கும் ஆங்கில ஹீரோ யார்?
தந்தைக்கு கொடுத்த சத்தியம்..
தந்தை குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய டிடி, தனது தந்தைக்கு அவரது மரண படுக்கையில் அவருக்கு செய்து கொடுத்த சத்தியம் குறித்து பேசினார். தனது தந்தை இறக்கும் தருவாயில் இருந்த போது, இனி இந்த குடும்பத்தை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு அவர் “நீங்கள் கவலை படாதீங்கப்பா நான் பார்த்துக்கொள்கிறேன்..” என்று பேசியதாகவும் கூறியிருக்கிறார். இவர் தனது தந்தை குறித்து பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
டிடியின் தந்தை, கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதையடுத்து 4 வருடங்களுக்கு முன்பு டிடி அவருக்கு ஒரு கடிதம் எழுதி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், நீங்கள் உயிருடன் இருந்த போது உங்களுக்கு ஒரு நல்ல ஷர்ட் வாங்கி கொடுக்காததை எண்ணி தான் இப்போதும் வருத்தப்படுவதாகவும் அவரை எல்லா நாளும் மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
டிடியின் தந்தை, சிறு வயதில் பள்ளிக்கு ஃபீஸ் கட்டுவதில் இருந்து, காசோலை நிறப்புவது வரை அனைத்தையும் டிடியையே செய்ய சொல்லி கூறுவாராம். சிறு வயதில் இருந்து மிகவும் தனிச்சையாக செயல்பட வேண்டும் என கூறி தன்னை அவர் வளர்த்ததாகவும் டிடி குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | விவாகரத்தில் முடிந்த திருமணம்..தாங்க முடியாத சாேகம்! மனம் திறந்த டிடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ