வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பிரியங்கா சோப்ரா!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதி வாடகை தாய் மூலம் தாங்கள் பெற்றோர்களாக மாறி உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 22, 2022, 08:35 AM IST
  • வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுள்ளதாக பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
  • பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இருவரும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பிரியங்கா சோப்ரா!  title=

பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) மற்றும் நிக் ஜோனஸ் தம்பதிகள் அவர்களது ரசிகர்களுக்கு தாங்கள் பெற்றோர்களாக மாறி உள்ளோம் என்ற சந்தோஷமான செய்தியை தெரிவித்துள்ளனர்.  வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுள்ளதாக பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். "வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றதில், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். இந்த சமயத்தில் எங்கள் குடும்பத்துடன், நாங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறோம். அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா. 

ALSO READ | இன்று OTT-யில் வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள்!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

சில மாதங்களுக்கு முன் குடும்பம் மற்றும் குழந்தையுடன் இருக்க விரும்புவதாக பிரியங்கா சோப்ரா ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.  எங்கள் இருவருக்கும் குழந்தையை வளர்க்க விருப்பம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.  பிரியங்கா சோப்ரா மற்றும் இன்டர்நேஷனல் சிங்கர் நிக் ஜோனஸ் இருவரும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  வெகு சிறப்பாக நடைபெற்ற திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் 10 வயது சிறியவர்.  இதனால் இவர்களின் திருமணம் அந்த சமயத்தில் பலரால் பலவிதமாக பேசப்பட்டது. 

priyankachopra

சமூக வலைத்தளங்களில் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இன் புகைப்படங்கள் எப்பொழுதுமே வைரலாக இருக்கும்.   பிரியங்கா சோப்ரா தற்போது ஜோயா அக்தர் தயாரிப்பில் கேத்ரினா கைப் மற்றும் ஆலியா பட் நடிக்கும் ஜி லீ ஜாரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படம் 2023 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகவுள்ளது.

ALSO READ | RRR ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News