பேரன்பு trailer: ரசிகர்களை கலங்க வைத்த மம்மூட்டி-ன் மெய்சிலிர்க்கும் நடிப்பு...

இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள `பேரன்பு' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2019, 12:02 PM IST
பேரன்பு trailer: ரசிகர்களை கலங்க வைத்த மம்மூட்டி-ன் மெய்சிலிர்க்கும் நடிப்பு...  title=

இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள `பேரன்பு' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

தமிழ் சினிமாவில், தனது படைப்புகள்மூலம் புகழ்பெற்ற இயக்குநர்களில் முக்கியமானவர், இயக்குநர் ராம். இவர் `கற்றது தமிழ்’ திரைப்படத்தில் தொடங்கி `தரமணி’ வரை இதுவரை 3 படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், தனது ஒவ்வொரு படத்தையும் உயிரோட்டம் உள்ள படைப்பாக உருவாக்கியுள்ளார். இந்நிலையில், தற்போது இவர் தனது 4-வது படைப்பாக 'பேரன்பு' திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில், மலையாள திரைப்படத்தின் மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் கைகோத்துள்ளார். மம்மூட்டியுடன் அஞ்சலி, 'தங்க மீன்கள்' சாதனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைக்கு வருவதற்கு முன்பே நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ், ஷாங்காய் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, அங்கு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது.

படம் ரிலீஸுக்குத் தயாராகியுள்ள நிலையில், ஏற்கெனவே இரண்டு டீசர் வெளியாகியது. இந்நிலையில், இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லரில் தனது உணர்ச்சிபூர்வமான நடிப்பால் ராசிகளை ஈர்த்துள்ளார். 

டிரெய்லர்:-

 

Trending News