தமிழ் சினிமாவில் தற்போது இளம் இயக்குனர்களின் பங்களிப்பு பெரும் அளவில் உள்ளது. டாப் ஹீரோக்கள் அனைவரும் இளம் இயக்குனர்களின் பின்னால் சென்று படங்களில் நடித்து வருகின்றனர். ஒரு படம் இரண்டு படம் இயக்கிய இயக்குனர்களுக்கு கூட மாஸ் ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் ராஜா ராணி என்ற ஒரு படத்தை இயக்கியவுடன் ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் படிக்க | நெட்பிளிக்சில் உள்ள சிறந்த டாப் 5 வெப் சீரிஸ்கள்!
தெறி படத்தின் மூலம் விஜய்யை அவரது கரியரில் அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றார் அட்லீ. விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் சீன்ஸ், லவ், ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக தெறி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மெர்சல் என்ற படத்தையும் விஜய்யை வைத்து இயக்கி இருந்தார். மூன்று கதாபாத்திரங்களில் நடித்த விஜய்யின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆனது மெர்சல் படத்திற்கு பிறகு தான்.
அதன் பிறகு மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து பிகில் என்ற படத்தை இயக்கினார் அட்லீ. ராயப்பன், மைக்கில் என்று அப்பா மகன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்து இருந்தார். பிகில் படத்தில் சிறிது நேரமே வரும் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அமேசான் பிரைம் நிறுவனம் ட்விட்டரில் "ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து முழு படம் எடுத்தால் எப்படி இருக்கும்" என்று கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு பதில் அளித்த அட்லீ, ராயப்பன் கதாபாத்திரம் பேசும் "செஞ்சுட்டா போச்சு" என்ற வசனத்தை பதிவிட்டு இருந்தார். நீண்ட நாட்களாக மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குங்கள் என்று ரசிகர்கள் அட்லீயிடம் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த நிகழ்வு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
Senjittaaaaa pochuuuuu….. https://t.co/sfIxMt3RZb
— atlee (@Atlee_dir) May 24, 2022
மேலும் படிக்க | படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு விபத்து..ரசிகர்கள் அதிர்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR