Biography: விவேகானந்தன் என்னும் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பயணம்

"இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…" என்ற பிரபல வசனத்துக்கு சொந்தக்காரர் இன்று நம்முடன் இல்லை, அவரின் வாழ்க்கைப் பயணத்தின் சில துளிகள்...

Written by - Malathi Tamilselvan | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 17, 2021, 08:09 AM IST
  • நடிகர் விவேக் இன்று காலை காலமானார்
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்ன கலைவாணர் அதிகாலையில் உயிரிழந்தார்
  • இன்று மாலை சுமார் ஐந்து மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும்
Biography: விவேகானந்தன் என்னும் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பயணம்  title=

”இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…’ என்ற பிரபல வசனத்துக்கு சொந்தக்காரர் இன்று நம்முடன் இல்லை. 

பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் புதுப்புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விவேக்கின் இந்த வசனம் பிரபலமானது. ஆனால், இதுபோல் பற்பல பஞ்ச் டயலாக்குகளை பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உன்னதமான பணியை செய்துவந்தார் நடிகர் விவேக்.

மனிதனாக பிறந்தால் மற்றவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட விவேகானந்தன் என்ற விவேக்கின் வாழ்க்கைப் பயணத்தின் சிறு துளிகள்…

Also Read | சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும்..

1961 நவம்பர் 19ஆம் நாள் மதுரையில் பிறந்த விவேகானந்தன், சின்னக் கலைவாணராக உருவெடுத்த வரலாறு இது. ஆம், இன்று பத்மஸ்ரீ பட்டம் பெற்ற மனிதாபிமான விவேக் நம்முடன் இல்லை.  

ஆசிரியரான தந்தைக்கு பிறந்த விவேக், தனது நகைச்சுவை மூலம் லஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்ற பல சமூக விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

இப்படி நல்ல விஷயங்களை, நாட்டுக்கு அவசியமான விஷயங்களை இடித்துரைத்த (whistleblower) விவேக் 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கினார்.

Also Read | பத்மஸ்ரீ நடிகர் விவேக் அதிர்ச்சி மரணம் 

அதற்கு முன்னதாக, கலைத்தாகம் கொண்ட விவேகானந்தன், படிப்பு முடித்த பிறகு சென்னையில் பணியாற்றும் போது,  ஓய்வு நேரத்தில் மெட்ராஸ் நகைச்சுவை கிளப்பில் பங்கேற்றார், அந்த அமைப்பை விரிவுபடுத்துவதிலும் விவேக்கின் பங்கு குறிப்பிடத்தக்கது. 

தனது தேர்ந்த நகைச்சுவை உணர்வாலும், அதை உரிய முறையில் வெளிப்படுத்தும் திறமைக்காகவும் நகைச்சுவை கிளப்பின் சிறந்த பொழுதுபோக்கு விருதை பல முறை வென்றார் விவேக்.   

நகைச்சுவை கிளப் மூலமாக திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரிடம் அறிமுகமான விவேக், அவரின் திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட்-எழுத்தாளராக பணியாற்றி வந்தார்.   
புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் என அவர் தனது தனிப்பட்ட முத்திரையை பல திரைப்படங்களில் பதித்துள்ளார்.

vivek

சீர்திருத்த கருத்துகளை தனது கதாபாத்திரங்கள் மூலமாக பரப்புவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் விவேக் தவறவிட்டதில்லை. எனவே சின்னக் கலைவாணர் என்று பட்டமும் கிடைத்தது. 

Also Read | நேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு; நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!

பத்மஸ்ரீ விருதால் அலங்கரிக்கப்பட்ட நடிகர் விவேக், சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு என பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.  

முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல்கலாமை (A. P. J. Abdul Kalam) தனது முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட விவேக், அவருடைய கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் (Green Kalam) அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் என பல்வேறு இடங்களிலும் இதுவரை 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.

2009ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றவர் விவேக் என்று சொல்வதை விட அந்த விருது, தனக்கு உரியவரை தேர்ந்தெடுத்தது என்றே சொல்லலாம்.  

நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு காலை 4.35 மணிக்கு காலமானார். தற்போது அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை விருக்கம்பாக்கத்தில் உள்ள மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அன்னாரின் உடலுக்கு, பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ALSO READ: குழந்தைகளை குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News