பெல்ஜியம் நாட்டு புறா; 10 கோடி-க்கு ஏலம் விடப்பட்ட விநோதம்!

புறா பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற புறா ஒன்று வரலாறு காணாத வகையில் 1.25 மில்லியன் யுரோவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Mukesh M | Last Updated : Mar 19, 2019, 04:23 PM IST
பெல்ஜியம் நாட்டு புறா; 10 கோடி-க்கு ஏலம் விடப்பட்ட விநோதம்! title=

புறா பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற புறா ஒன்று வரலாறு காணாத வகையில் 1.25 மில்லியன் யுரோவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது!

புறாவை ஏலத்தில் விடும் தளமான PIPA Pigeon Paradise (www.pipa.be), சமீபத்தில் ‘அர்மாண்டோ’ எனும் புறாவை ஏலத்தில் விட்டது. அதிக தூரம் கடந்த மிகச்சிறந்த பெல்ஜியம் புறா எனக்கூறப்படும் இந்த புறா, புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன் என அழைக்கப்படுகிறது,

லூயிஸ் ஹாமில்டன் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த கார் பந்தைய வீரர். ஐந்து முறை பார்முலா வன் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவருடன் இந்த அர்மாண்டோ புறா ஒப்பிடப்படுகிறது.

அர்மாண்டோ புறா ஏலத்தில் விற்கப்படுவதற்கு முன்னதாக ஒரு புறா அதிகபட்சமாக 376 ஆயிரம் யூரோவுக்கு விற்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில் தற்போது அர்மாண்டோ 1.25 மில்லியல் யுரோவுக்கு (இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாய்) ஏலம் சென்று புதிய சாதனை படைத்துள்ளது.

அர்மாண்டோ-வுக்கு வயது ஐந்துதான். தற்போது ஓய்வுக்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த புறா ஏற்கனவே சில குஞ்சுகளுக்கு ‘அப்பா’ ஆகிவிட்டது.

PIPA-வின் நிர்வாக இயக்குனர் நிக்கோலஸ் இதுகுறித்து தெரிவிக்கையில், ”இது உண்மையான நிகழ்வா? அல்லது கனவா என ஆரம்பத்தில் சந்தேகம் எழுந்தது. இப்படியொரு விலைக்கு புறா விற்பனையாகும் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

அதிக பட்சம் 4-5 லட்ச யூரோ விலை போகும் என நினைத்தோம். ஒருவேளை 6 லட்ச யூரோ விலை போனால் நன்றாக இருக்குமே என நினைத்தோம். ஆனால் ஏலத்தில் திடீரென ஒரு போட்டி ஏற்பட்டது ஒரே ஒரு மணி நேரத்தில் 5.32 லட்சம் யூரோவிலிருந்து 1.25மில்லியன் யூரோவுக்கு விலையை ஏற்றிவிட்டது. 

பொதுவாக ஒரு பந்தய புறாவுக்கு 2,500 யூரோ கிடைப்பதுதான் வழக்கம். ஆனால் அர்மாண்டோ விவகாரத்தில் சீனர்கள் போட்டியில் இறங்கியதால் விலை பல மடங்காய் பெருகிவிட்டது” என தெரிவித்தார்.

காரணம் அர்மாண்டோ ஒரு வழக்கமான பந்தய புறா அல்ல. தான் பங்கேற்ற கடைசி மூன்று பந்தயங்களில் சம்பியன் பட்டம் வென்றது. 2018 ஏஸ் புறா சாம்பியன்ஷிப், 2019 புறா ஒலிம்பியாட் மற்றும் தி ஆங்குலோமி என மூன்றிலும் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Trending News