வந்தாச்சி கோடை சுடும் வெயில்.. இந்த உணவுகளுக்கு இனி 'NO' சொல்லுங்க

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 8, 2024, 04:58 PM IST
  • கோடை காலத்தில் உடலை ஹைட்ரேட் ஆக வைத்திருப்பது அவசியம்.
  • கோடை வெயில் காலத்தில் நாம் காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது.
  • கோடை வெயிலுக்கு சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
வந்தாச்சி கோடை சுடும் வெயில்.. இந்த உணவுகளுக்கு இனி 'NO' சொல்லுங்க title=

கோடை காலம் என்றாலே பலரும் வெயிலின் தாக்கத்தை நினைத்து அச்சமடைவார்கள். ஏனெனில் இந்த நேரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பலரும் சில உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்வார்கள். கோடைகாலத்தில் நாம் வயிற்றுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுகளை சாப்பிடும்போது அது நமது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இப்போது கோடைகாலத்தில் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

கோடை காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்:

1) தக்காளி: வைட்டமின் சி நிறைந்த சத்து அதிகம் நிறைந்த தக்காளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், இது அதிகளவு நீர் சத்தை கொண்டுள்ளது. தக்காளியில் லைகோபீன் போன்ற நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அவை நாள்பட்ட நோய்களை சரிசெய்வதில் உதவும். அதிலும் குறிப்பாக தக்காளியானது புற்றுநோய்க்கு உதவுகிறது மற்றும் இது கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவாக உள்ளது.

2) தர்பூசணி: தர்பூசணி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் சத்து நிறைந்த பழமாகும். தண்ணீர் உள்ளது, இதை நீங்கள் பல வழிகளில் சாப்பிடலாம். பலருக்கும் பிடித்தமான கோடை உணவாக தர்பூசனி ஆகும். இந்த தர்பூசணியில் லைகோபீன் உள்ளது, இது சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவுகள்!

3) எலுமிச்சை: கோடை காலத்தில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க ஒரு கிளாஸ் எலுமிச்சை சாற்றை விட இனிமையானது எதுவுமில்லை. இந்த சாறு உங்கள் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும்.

4) சுரைக்காய்: அதிக நீர் உள்ளடக்கத்தை கொண்ட சுரைக்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சுரைக்காயில் உள்ள அதிகப்படியான நீர் செரிமான மண்டலத்தை சீராக்குகிறது.

கோடை காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:

1) டீ அல்லது காபி: கோடை நேரத்தில் அதிகளவ கப் டீ அல்லது காபி குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும், இதிலுள்ள காஃபின் மற்றும் சர்க்கரை உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்துகிறது. எனவே கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க எலுமிச்சை சாறு பருகுவது நல்லது.

2) உலர் பழங்கள்: பொதுவாக உலர் பழங்கள் ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவை தான் என்றாலும் கோடை காலத்தில் இவற்றை குறைவாக சாப்பிட வேண்டும். உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது, எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

3) இறைச்சி: கோடையில் அதிகப்படியான இறைச்சி உண்பதும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழம்பு மீன், சிவப்பு இறைச்சி, தந்தூரி சிக்கன் அல்லது கடல் உணவுகளை சாப்பிட விரும்பினால், இந்த நாட்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

4) கொழுப்பு நிறைந்த உணவுகள்: கோடை காலத்தில் நீங்கள் அதிக கலோரி நிறைந்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் உங்கள் உடலையும், செரிமானத்தையும் பாதிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நரை முடிக்கு டாடா சொல்லுங்க.. இந்த ஒரு இலை இருந்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News