Manipur Violence: மணிப்பூர் மாநிலம் கடந்த சில மாதங்களால் இனக்கலவரம் தீவரமாகியுள்ளதை அடுத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த உச்சமாக, இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக நடத்திச்சென்று கொடூர வன்முறையில் ஆண்கள் கும்பல் ஈடுபட்டது. இதன் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி, நாட்டையே கொந்தளிக்க வைத்தது.
இந்நிலையில், அந்த வீடியோவில் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்ட பெண்களில் ஒருவரின் தாயார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறும் தகவல்கள் அந்த வீடியோவை பார்த்தபோது எழுந்த பதபதைப்போடு இரண்டு மடங்காக உள்ளது என்றுதான் கூறவேண்டும். இனக்கலவரத்தால் பேரழிவிற்குள்ளான தங்களின் குடும்பம் சொந்த கிராமத்திற்கு இனி செல்வதற்கே வாய்ப்பு இல்லை என்று அந்த தாயார் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அந்த குடும்பத்தின் எதிர்காலம்
அந்த பெண்ணின் தாயாரால் தொடர்ந்து பேச இயலவில்லை என தெரிகிறது. தீவிர மன உளச்சலுக்கு ஆளாகியுள்ள தாயார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், அங்கு நடைபெறும் வன்முறையைத் தடுக்கவோ அல்லது மக்களைப் பாதுகாக்கவோ மணிப்பூர் அரசாங்கம் போதுமான அளவு எதுவும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
"எனக்கு முழு நம்பிக்கையாக இருந்த என் இளைய மகனை இழந்து விட்டேன். 12ஆம் வகுப்பு முடித்தவுடன், மிகவும் சிரமப்பட்டு அவனைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தேன். அவனுடைய தந்தையும் இப்போது இல்லை. என் மூத்த மகனுக்கு வேலை இல்லை. அதனால், எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும் போது, நம்பிக்கை இல்லை. என் மனதுக்கு நம்பிக்கை இல்லை. என் மனதுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
இந்திய தாய்மார்களே...
நாங்கள் எங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்ல வாய்ப்பில்லை. அந்த எண்ணம் என் மனதில் தோன்றவே இல்லை. நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது. நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன, எங்கள் வயல்கள் அழிக்கப்பட்டுள்ளன. நான் ஏன் திரும்பப் போக வேண்டும்? என் கிராமம் எரிந்தது. எனக்கும் என் குடும்பத்திற்கும் எதிர்காலம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் என்னால் திரும்பிச் செல்ல முடியாது" என்று அவர் அந்த ஊடகத்திடம் கூறினார்.
தொடர்ந்த அவர்,"எனக்கு மிகவும் கோபமும், கொந்தளிப்பும் வருகிறது. அவள் தந்தையையும், சகோதரனையும் கொடூரமாக கொன்றுவிட்டு, எனது மகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர். நான் மிகவும் வேதனைப்பட்டேன். மணிப்பூர் அரசு எதுவும் செய்யவில்லை.
இந்தியாவின் தாய்மார்களே, தந்தையர்களே நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம், இனிமேல் என்ன செய்வது என்று சமூகமாக சிந்திக்க முடியாமல் தவிக்கிறோம். கடவுளின் கிருபையால், நான் உடல் ரீதியாக நன்றாக இருக்கிறேன், ஆனால் நான் இரவும் பகலும் அதைப் (வன்முறை) பற்றி சிந்திக்கிறேன். நான் சமீப காலமாக மிகவும் பலவீனமாக உணர்ந்ததால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகிறேன்" என்றார்.
மே 3, 4
மே 3 ஆம் தேதி தொடங்கிய வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் அரசாங்கத்தை அவர் குற்றம் சாட்டினார். மணிப்பூரின் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக உள்ள மெய்டீஸ் மற்றும் குக்கி பழங்குடியினருக்கு இடையே இந்த மோதல்கள் நடைபெறுகின்றன. மெய்டீஸ் இனம் பட்டியலிடப்படாத பழங்குடியினம், குக்கி இனம் பட்டியலிடப்பட்ட பழங்குடியினம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இரு தரப்பினருக்குள் கடந்த மே 3ஆம் தேதி வன்முறை வெடித்தது.
அந்த வன்முறைக்கு ஒரு நாளுக்குப் பிறகு, மே 4 அன்று அந்த தாயாரின் மகள் ஆடையின்றி, சாலையில் நடக்கவைத்து, கேமராவுடனான ஆட்கள் முன்பு வன்முறைக்கு ஆளாகியுள்ளார். இதை தடுக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் அந்த கும்பலால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து நேற்று முன்தினம் முதல் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க | மணிப்பூர் விவகாரத்தில் மேலும 3 பேர் கைது! சிக்கியது எப்படி..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ