CBSE-ன் மறுத்தேர்வு முடிவை எதிர்த்து கேரள மாணவர் ரோகன் மேத்திவ் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்!
CBSE 12-ஆம் வகுப்பு பொருளாதார பாடம் மற்றும் 10-ஆம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்ததால், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என கடந்த மார்ச் 28-ம் தேதி CBSE அறிவித்தது.
இந்த முடிவினை எதிர்த்து கேரளாவின் கொச்சியை சேர்ந்த மாணவர் ரோகன் மேத்திவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.
CBSE student sought quashing the decision of CBSE to re-conduct examination, & for directing Board to publish results on the basis of already held examination.He also sought setting up of a special high-powered committee to conduct a detailed investigation into the entire case.
— ANI (@ANI) March 30, 2018
இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "நடத்தப்பட்ட தேர்வினை ரத்து செய்வது ஏற்புடையது அல்ல, முன்னதாக நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விவக்காரம் தொடர்பாக தனி குழு அமைத்து விசாரணை நடத்தி நல்ல முடிவினை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலாளர் அனில் ஸ்வரூப் தெரிவிக்கையில்...
வரும் ஏப்ரல் 25-ஆம் நாள் த்து செய்யப்பட்ட CBSE, 12 ஆம் வகுப்பு 2 பொருளாதார தேர்விற்கான மறுத்தேர்வு நடத்தப்படும் எனவும், 10 ஆம் வகப்பிற்கான தேர்வின் தேதி 15 தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்!