கொரோனா வைரஸ் பரவுதலில் டெல்லி இதுவரை தொற்று சமூக பரிமாற்ற நிலையை அடையவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லி 2,948 புதிய நோய்த்தொற்றுகள் பதிவு செய்து, மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையை 80,000 எட்டியுள்ள நிலையில் உள்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
READ | சலூன் கடைகள் செயல்பட அனுமதி... இயல்பு நிலைக்கு திரும்புகிறதா மும்பை?
கொரோனா தொற்று பரவுதல் நாளுக்கு நாள் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று செய்தி நிறுவனமான ANI-க்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார். இதன்போது தேசிய தலைநகரில் சமூக அளவிலான வைரஸ் பரவுவது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர், "பயப்படத் தேவையில்லை, இந்த விஷயத்தில் மூன்று மூத்த மருத்துவர்களைக் கலந்தாலோசித்துள்ளோம். டெல்லியில் இதுவரை சமூக பரவலுக்கான ஆதாரங்கள் இல்லை" என தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில்., "நான், டாக்டர் பால்(அரசாங்க சிந்தனை குழு உறுப்பினர்), டாக்டர் பார்கவா (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர், இந்த நெருக்கடியில் அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சி) மற்றும் டாக்டர் குலேரியா (AIIMS இயக்குனர்) ஆகியோருடன் இதுகுறித்து பேசியுள்ளேன். டெல்லியில் சமூக தொற்று இதுவரை ஏற்படவில்லை என நாங்கள் நம்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
"மொத்தமாக COVID-19 சோதனைகள் நடத்தப்பட்டதால் இதுபோன்ற நிலை தோன்றியது. இப்போது நாங்கள் சராசரியாக 20,000 சோதனைகளை தினசரி மேற்கொண்டு வருகிறோம். டெல்லியில் நிலை குறித்து அச்சப்பட தேவையில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ | கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா...
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்கிகல் டெல்லி இரண்டாம் இடம் வகிக்கின்றது. இங்கு 80,188 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது மற்றும் 2,558 இறப்புகள் பதிவாகியுள்ளது. அதேவேளையில் 28,329 பேர் தற்போது கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. எனினும் பிராந்தியத்தில் இதுவரை சமூக தொற்று பரவுதல் ஏற்பட்டதாக ஆதாரங்கள் இல்லை என உள்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.