எதிர்வரும் மத்திய பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலினை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது!
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பினை கடந்த அக்டோபர் 6-ஆம் நாள் தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் வெளியிட்டார். இத்தேர்தல்களில் வெற்றி பெற்ற ஆட்சியை பிடிக்க நாட்டின் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசம் மாநில தேர்தலில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலினை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
मप्र विधानसभा चुनाव के लिये कांग्रेस प्रत्याशियों की दूसरी सूची जारी, 155 के बाद अब 16 और उम्मीदवारों की सूची हुई जारी। pic.twitter.com/A9SdKmcT6m
— MP Congress (@INCMP) November 4, 2018
16 வேட்பாளர்களின் பெயர் கொண்ட இப்பட்டியலில் எதிர்கட்சி தலைவர் அஜய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சோரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேவேலையில் முன்னாள் முதல்வர் அர்ஜூன் சிங் மகன் அஜய் சிங் சாருஹெட் தொகுயில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மத்திய பிரதேச மாநில காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசதில் வரும் நவம்பர் 28, 2018-ஆம் நாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக சார்பில் இதுவரை 177 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசம் | 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில்
- வாக்குப்பதிவு - நவம்பர் 28, 2018
- வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018