Corona New Guidelines: விமான பயணிகளுக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமல்

Corona New Guidelines: உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணிகளுக்கான கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முகக்கவசம் பயன்படுத்துவது தொடர்பான முக்கியமான முடிவு 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 16, 2022, 05:37 PM IST
  • முகக்கவசம் பயன்படுத்துவது தொடர்பான முக்கியமான முடிவு
  • சிவில் விமன போக்குவரத்து அமைச்சகம் அறிவித்த புதிய கொரோனா அறிவுறுத்தல்
  • முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆனால் அபராதம் கிடையாது
Corona New Guidelines: விமான பயணிகளுக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமல் title=

புதுடெல்லி: உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணிகளுக்கான கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முகக்கவசம் பயன்படுத்துவது தொடர்பான முக்கியமான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமானப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, விமானப் பயணத்தின் போது முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது. இருப்பினும், விமானப் பயணிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களில் பயணிக்கும் போது முகக்கவசங்கள் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,66,676 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 7,918 இலிருந்து 7,561 ஆக குறைந்துள்ளது.

மேலும் படிக்க | Corona 4th Wave: குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கொரோனா தொற்று காரணமாக மேலும் 2 நோயாளிகள் உயிரிழந்தனர். இதனால், கொரோனா பலி எண்ணிக்கை 5,30,535 ஆக அதிகரித்துள்ளது. அண்மையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த நோயாளிகளில் ஒருவர் குஜராத்தைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 7,561 ஆகக் குறைந்துள்ளது, இது மொத்த வழக்குகளில் 0.02 சதவீதமாகும். அதே நேரத்தில், நோயாளிகளின் தேசிய மீட்பு விகிதம் 98.79 சதவீதமாக உள்ளது. நாட்டில் இதுவரை 4,41,28,580 நோயாளிகள் இந்த கொடிய வைரஸின் தாக்குதலில் இருந்து மீண்டுள்ளனர். 

மேலும் படிக்க | உலக தமிழ் வம்சாவளி மாநாடு: 2023 ஜனவரி 6 & 7 தேதிகளில் சென்னையில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News