சபரிமலை கோயில் சன்னிதானத்தை நெருங்கிய இரு பெண்கள்- ஆந்திர பெண் செய்தியாளர் கவிதா மற்றும் அவருடன் சென்ற பெண்ணை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு...!
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் கேரளாவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சபரிமலை கோவிலுக்கு மகளிர் வருவதை எதிர்த்து 2 நாட்களாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், அனைத்து தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அழைப்பு விடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மகளிர் வருவதை எதிர்த்து, கேரளாவில் இரண்டாவது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. சபரிமலை பாதுகாப்பு கமிட்டி, அந்தராஸ்ட்டிரிய இந்து பரிஷத் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததால், பல ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சபரிமலையில் போராட்டங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகளே காரணமென முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். சுவாமி நம்பிக்கை கொண்டவர்கள் வராமல் தடுக்கவும், கேரளத்தை கலவர பூமியாக்கவும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், சபரிமலை விவகாரத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால் போராட்டத்தை கைவிட தயரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் தேவசம் போர்டு செல்லவில்லை என்றும், சபரிமலை விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருப்பதாகவும், சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடக்கம்பள்ளி சுரேந்திரன், தேவசம்போர்டு அமைச்சர் கூறுகையில், சபரிமலை கோயில் சன்னிதானத்தை நெருங்கிய இரு பெண்கள்- ஆந்திர பெண் செய்தியாளர் கவிதா மற்றும் அவருடன் சென்ற பெண்ணை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கேரள அரசின் நோக்கம் பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதே தவிர போராட்ட எண்ணமுடையவர்களை அனுமதிப்பதல்ல, அந்த இரு பெண்களுள் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர், மற்றொருவர் செய்தியாளர்; இது லட்சக்கனகான பக்தர்களின் உணர்வை பாதிக்கும். சபரிமலை போட்டம் நடத்தவேண்டிய இடம் இல்லை. சபரிமலைக்கு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் செய்தியால்ர்களுக்கோ மற்றவர்களுக்கோ அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.