புது டெல்லி: மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பை எப்படி நம்மால் மறக்க முடியாதோ, அதேபோல ஜூலை 26, 2008 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த சம்பவத்தை நம்மால் மறக்க முடியாது.
அன்று சிவில் மருத்துவமனையாகட்டும், மாநகராட்சியின் எல்ஜி மருத்துவமனையாகட்டும், பேருந்துகள், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்கள், கார்கள் என எதுவாகட்டும்... அன்றைய தினம் அகமதாபாத்தில் 70 நிமிட இடைவெளியில் 22 குண்டுவெடிப்புகள் நடந்தன. எங்கு பார்த்தாலும் சிதறிய உடல்கள், கதறும் மனிதக்குரல், தீ, புகை என பார்ப்பவர்களை உலுக்கும் காட்சியாக இருந்தது. 56க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
49 குற்றவாளிகள்:
மொத்தம் 24 குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. கலோல் மற்றும் நரோடாவில் குண்டுகள் வெடிக்கவில்லை. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மீதமுள்ள 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: "எல்லையில் சீனா.. நேருவை சுற்றி வரும் மோடி அரசு" சுற்றி வளைத்த மன்மோகன் சிங்
அன்று அரங்கேற்றப்பட்டத தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி அமைப்பு பொறுப்பேற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகும், தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், தேசிய தலைநகரம் டெல்லி மற்றும் குஜராத்தின் இன்னும் பிற நகரங்களில் குண்டுவெடிப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இருந்தன என்பதும் மறக்க முடியாது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு:
இந்த வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் என குஜராத் சிறப்பு நீதிமன்றம் 8 பிப்ரவரி 2022 அன்று தீர்ப்பளித்தது. அப்பொழுது சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட 28 பேர் மீது சரியான ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். குண்டுவெடிப்பு நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) நடந்த வாதங்களுக்குப் பிறகு நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது. 38 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இமாலய சாமியாருக்கு இந்திய பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? பெரிதாகும் விவகாரம்
அகமதாபாத் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விவரங்கள்:
ஜாஹித் ஷேக், இம்ரான் ஷேக், இக்பால் ஷேக், சம்சுதீன் ஷேக், ஜாவேத் ஷேக், ஆசிப் ஷேக், அதீக் கில்ஜி, மெஹ்தி அன்சாரி, சஃபிக் அன்சாரி, ரஃபியுதீன், ஆரிஃப் மிர்சா, கபுமுதீன், சிபில் முஸ்லிம், சஃப்தர் நாகோரி, ஹபீஸ் முல்லா, சஜித் மன்சூரி, அப்சல் உஸ்மானி, சர்ஃபுதீன் இட்டி, முகமது சாதிக் ஷேக், அக்பர் சௌத்ரி, ஃபசல் துரானி, நௌசாத் சையத், அகமது பரேல்வி, ரஃபிக் அஃபிதி, அமீன் ஷேக், முகமது மொபின் கான், முகம்மது அன்சார், கியாசுதீன் அன்சாரி, ஆரிஃப் காஜி
உஸ்மான், யூனுஸ் மன்சாரி, இம்ரான் பதான், அபுபசர் ஷேக், அப்பாஸ் சமேஜா, சைபு அன்சாரி, முகமது சைஃப் ஷேக், ஜீஷன் ஷேக், ஜியா-உர்-ரஹ்மான், தன்வீர் பதான், அப்ரார் மணியார், ஷாதுலி காரிப், தௌசிப் பதான், முகமது அலி அன்சாரி, முகமது இஸ்மாயில், கமாருதீன், அலீம் காஜி, அனீக் சையத், முகமது ஷகீல்.
மேலும் படிக்க: உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் திருமணத்தில் 13 பெண்கள் பரிதாப சாவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR