லக்னோவில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நாளை முதல் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த வாரம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் விதமாக லக்னோ போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களாக பயிற்சி அளித்து வந்தனர்.இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.