சங்கடங்கள் நீங்க, பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் போடுவது இந்துக்களின் வழக்கம். தேங்காய் சுக்கு நூறாய் சிதறுவதைப் போல் பிரச்சனைகளும் சிதறி போகும் என்பது மக்களின் நம்பிக்கை.
அது தவிர கோவிலில் அர்ச்சனை செய்யும் போது, இறைவனுக்கு படையல் வைக்கும் போது அதில் நீங்காத இடம் பெறுவது தேங்காய்.
தேங்காய்க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றால், அது தூய்மையின் உருவமாக கருதப்படுகிறது. மற்ற பழ மரங்களைப் போல் மனிதர்கள் அல்லது பறவைகள் கடித்து போட்ட கொட்டையிலிருந்து வளருவதில்லை. முழுமையான தேங்காயிலிருந்து தென்னங்கன்று வளர்க்கப்படுகிறது. அதனுடைய இளநீரும் கைபடாமல் இருக்கிறது. அதனால் அது தெய்வத்திற்கு படைக்க உகந்த பொருளாக கருதப்படுகிறது.
உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க தேங்காய் மிகவும் உதவுகிறது. தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் உடலின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. தேங்காயுடன், அதன் எண்ணெயும் மிகவும் அற்புதமானத பலன்கள் கொண்டது.
தேங்காய் சருமத்தில் பளபளப்பை ஏற்படுத்துகிறது.
நம் முன்னோர்கள் உணவில் அதிக அளவில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தினர். தேங்காய் எண்ணையினால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் (Alzheimer's disease) குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேங்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கும். கொரோனா காலமாக இருப்பதால் அதிலிருந்து தப்பிக்க தேங்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்
தாய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் , தேங்காய் பாலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேங்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
தேங்காய் ஒரு நல்ல ஆண்டிபயாடிக். இது உங்களை அனைத்து வகையான அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.
தேங்காய் எண்ணெய் நல்ல சன்ஸ்கிரீன். வெயிலில் வெளியே செல்வதற்கு முன் இதை தடவிக் கொண்டால் போதும். விலையுயர்ந்த சன்ஸ்கிரீன் எதுவும் தேவையில்லை.
மலச்சிக்கல் பிரச்சினையிலும் தேங்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் தேங்காயில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் மலச்சிக்கலை போக்கும்.
வயிற்றில் பூச்சிகள் இருந்தால், இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் ஒரு ஸ்பூன் தேங்காயை எடுத்துக்கொண்டால், பூச்சிகள் இறக்கின்றன.
ஆன்மீகத்திலும் ஆரோக்கியத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த தேங்காயை தினமும் பயன்படுத்தி நன்மை பெறலாம்.
மேலும் படிக்க | Corona குளிர் காலத்தில் மின்னல் வேகத்தில் பரவும்; பீதியை கிளப்பும் வல்லுநர்கள்..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR