குளிர்காலம் துவங்கியதை அடுத்து, உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள, கேதார்நாத் சிவன் கோவில், நடை சாத்தப்பட்டன.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார் நாத், பத்ரிநாத் ஆகிய 4 கோயில் கள் அமைந்துள்ளன. கோடை முதல் குளிர் காலம் வரையிலான 6 மாதங் களுக்கு மட்டுமே இந்த கோயில் களின் நடை திறந்திருக்கும். சார்தாம் யாத்திரை என்ற பெயரில் இந்த நான்கு கோயில்களுக்கும் ஆண்டு தோறும் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டதால் கேதார்நாத் சிவன் கோவில், நடை இன்று வேத மந்திரங்கள் முழங்க அடைக்கப்பட்டது.
Uttarakhand: Portals of Kedarnath temple have been closed today for the winter season. pic.twitter.com/qVqMIugGD1
— ANI (@ANI) November 9, 2018